தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

omicron

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.  கடந்த மே மாதம் பாதிப்பு உச்சத்தை அடைந்த நிலையில்,  முழு ஊரடங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளும்,அளிக்கப்பட்டு வருகிறது.  இதனால் மீண்டும் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியது . தளர்வுகள் நாளையுடன் நிறைவடையவுள்ளது.

அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று  736 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சென்னையில் 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 772 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்று 9 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தனர். 

இந்நிலையில்  தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடயவுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் புதிய ‘ஒமிக்ரான்’ வகை கொரோனா பாதிப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவினால் அதன் எதிர் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்திருந்தார்.

புதிய வகை உருமாறிய மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவி வருகிறது. உருமாற்றம் அடைந்த புதிய 'ஒமிக்ரான்' (B.1.1.529) வகை கொரோனா உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், வங்காளதேசம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

அதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் பரவலால் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புரூணை, மியான்மர், கம்போடியா, திமோர், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் உலக சுகாதர அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மற்றும் தடுப்பூசி செலுத்தியோரையும் ஒமிக்ரான் வகை தொற்று தாக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே அதற்கான ஆயத்த நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை நடத்த உள்ளதால் ஒமைக்ரான் ஆலோசனையின் போது முக்கிய இடம் பிடிக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.