தி சென்னை சில்க்ஸ் குழுமத்தின் டீமேஜ் நிறுவனம், புதிய தொழில் நுட்பத்தில் மிகக் குறைந்த நாட்களில் மிகப் பெரிய மருத்துவமனையை கட்டி உலக சாதனை படைத்திருக்கிறது.

சென்னையில் புகழ் பெற்றுத் திகழும், தி சென்னை சில்க்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமான டீமேஜ் (TEEMAGE) பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது, கடந்த 2007 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு உள்ளது. 

இந்த டீமேஜ் நிறுவனதத்தில் தற்போது 16,076 பேர் பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்தியா முழுவதும் கடந்த 14 ஆண்டுகளில் உலகத் தரம் வாய்ந்த பல்வேறு கட்டுமானப் பணிகளை டீமேஜ் நிறுவனம் கட்டமைத்து உள்ளது. 

மிக முக்கியமாக, PRECAST தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, இந்திய அளவில் முதன்மையான நிறுவனமாக இந்த நிறுவனம் தற்போது புகழ் பெற்று திகழ்கிறது. 

அந்த வகையில், கடந்த 14 வருட தொடர்ச்சியாக மிக கடின உழைப்பால், தற்போது புதிய உலக சாதனையை படைத்திருக்கிறது தி சென்னை சில்க்ஸ் குழுமத்தின் டீமேஜ் நிறுவனம்.

அதாவது, இது வரை யாருமே செய்யாத வகையில், வெறும் 45 நாட்களில் 69,200.0056 சதுர அடியில் 401 படுக்கையறை வசதிகள் கொண்ட 2 அடுக்குமாடி மருத்துவமனைக் கட்டிடத்தை PRECAST தொழில் நுட்பத்தில் கட்டி சாதனை படை்திருக்கிறது.

இந்த மருத்துவமனை கட்டிடமானது கடந்த 18.5.2021 அன்று காலை துவங்கப்பட்டு, தற்போது நிறைவு செய்து கொடுத்து உள்ளது. இது மிகக் குறைந்த கால அவகாசத்தில் ப்ரீகாஸ்ட் கான்கீரிட் தொழில் நுட்பத்தில் கட்டப்பட்ட மிகப் பெரிய மருத்துவமனை (LARGEST HOSPITAL CONSTRUCTED BY PRECAST CONCRETE TECHNOLOGY IN SHORTEST PERIOD) எனும் உலக சாதனையை, இந்த நிறுவனம் இதன் மூலமாக புதிதாக படைத்திருக்கிறது. 

இந்த சாதனையை, எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் கெ்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்கள், இந்த பெரும் முயற்சியை புதிய உலக சாதனையாக அங்கீகரித்து இருக்கிறது.

அதற்கான உலக சாதனை சான்றளிப்பு விழா சென்னை அவினாசி, ஸ்ரீநாச்சம்மான் வித்யவாணி சிபிஎஸ்சி பள்ளி அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில எலைட் வேலர்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் அம்பாஸிடர் மற்றும் சீனியர் அட்ஜுடிகேட்டர் டாக்டர் ஜவகர் காத்திகேயன், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் அசோசியேட் எடிட்டர் மற்றும் சீனியர் ரெக்கார்ட்ஸ் மானேஜர் பி. ஜெகநான், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் சீனியர் ரெக்கார்ட்ஸ் மானேஜர் கவிஞர் எல். ராஜ்கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டு டீமேஜ் (TEEMAGE) பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் என்.கே. நந்தகோபாலிடம் உலக சாதனை சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்கள்.

இந்த நிகழ்வில், உலக சாதனை நிகழ்வின் திட்ட இயக்குநர் ஏ. பிரனேஷ்பாபுவும் கலந்துகொண்டு, அவரும் சேர்ந்து இந்த சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஸ்டேட் கவுன்சில் ஃபார் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பாராட்டு, வாழ்த்துக்களை கூறினார்.

மருத்துவ சேவை வழங்க தமிழக அரசிற்கு மருத்துவமனை கட்டிடத்தை நன்கொடையாக கட்டித்தர ரோட்டரி ஹெல்த்கேர் டிரஸ்ட் முடிவு செய்து, அதை அமைக்கும் பொறுப்பினை டீமேஜ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். 

ரோட்டரி ஹெல்த்கேர் டிரஸ்ட் கேட்டிருந்த படி, மருத்துவமனையை கட்டி கடந்த ஜூலை 2 ஆம் தேதி டீமேஜ் நிறுவனம் ஒப்படைத்தது. இன்னும் சில தினங்களில் ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தை தமிழக அரசிடம் ரோட்டரி ஹெல்ஹேர் டிரஸ்ட் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.