19 வயது இளம் பெண்ணை, அந்த பெண்ணின் காதலன் மற்றும் அவனது நண்பர்கள் 6 பேர் என மொத்தம் 7 பேர் சேர்ந்து, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

வட மாநிலங்களில் நடைபெறும் இதுபோன்ற சம்பவம், இந்த முறை தமிழ்நாட்டில் தான் நடந்திருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்து உள்ள பிரப்பன்வலசையில் இருக்கும் தனியார் மீன் நிறுவனத்தில் 19 வயது பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். 

இந்த இளம் பெண், அந்த நிறுவனத்தில் கூடவே வேலை பார்த்து வந்த 25 வயது இளைஞன் ஒருவனுடன் நட்பாகப் பழகி வந்தார். ஆனால், இவர்களது நட்பு காலப்போக்கில் காதலாக மாறி உள்ளது. 

அப்போது, அந்த இளைஞன், இந்த இளம் பெண்ணிடம் “நான் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்” என்று, பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி, அந்த இளம் பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். அத்துடன், இந்த பாலியல் பலாத்கார காட்சியை, அந்த பெண்ணிற்கேத் தெரியாமல், அந்த இளைஞன், தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துக்கொண்டார்.

இதனையடுத்து, அந்த காதலன் தனது காதலியுடன் உல்லாசம் அனுபவித்ததை, தனது சக நண்பர்களிடம் கூறி, இந்த ஆபாச வீடியோவையும் காட்டி உள்ளான். 

இதனைப் பார்த்துச் சபலப்பட்ட அவனது நண்பர்கள், அந்த இளம் பெண் மீது ஆசைப்பட்டு உள்ளனர்.

இதனால், மறுநாள் தனது காதலியை சந்தித்துப் பேசிய அந்த காதலன், “எனது நண்பர்கள் 6 பேர், உன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்” என்று, கூறி, தனது காதலியைக் கட்டாயப்படுத்தி இருக்கிறான். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், இதனை ஏற்க மறுத்து, அவருடன் சண்டைக்குச் சென்று உள்ளார். 

இதனால், தான் எடுத்து வைத்திருந்த ஆபாசப் படங்களைக் காட்டி, தனது காதலியை அந்த காதலன் மிரட்டத் தொடங்கி உள்ளான். இதனால், மானத்திற்குப் பயந்து, வேறு வழியில்லாமல், காதலன் சொன்னபடி, நடக்கச் செய்துள்ளார். அதன்படி, காதலன் உட்பட அவனது நண்பர்கள் 6 பேர் என மொத்தம் 7 பேர் சேர்ந்து, அந்த 19 வயது இளம் பெண்ணை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இதன் காரணமாக, அந்த இளம் பெண் கர்ப்பம் அடைந்து உள்ளார். ஒரு கட்டத்தில், பயந்து போன அந்த இளம் பெண், தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்து தனது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் தாயார், அங்குள்ள உச்சிப்புளி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், 19 வயது இளம் பெண், கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர், இந்த வழக்கு ராமநாதபுரம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் முதற்கட்டமாகப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அத்துடன், இந்த வழக்கில் தற்போது தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, 19 வயது இளம் பெண்ணை, அந்த பெண்ணின் காதலன் மற்றும் அவனது நண்பர்கள் 6 பேர் என மொத்தம் 7 பேர் சேர்ந்து, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.