"செயின்ட் பிரிட்டோ அகாடமி ஆசிரியர்களுக்கு பென்ஷன்.. தனியார் பள்ளியில் தரமான திட்டம்! Dr.விமலா ராணியின் சிறப்பு பேட்டி

ஆகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக மட்டுமல்லாமல் தனிச்சிறப்புடன் தனித்து உயர்ந்த நிற்கிறது செயின்ட் பிரிட்டோ அகாடமி. தமிழ்நாட்டில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக என்றும் அழியாத கல்விச் செல்வத்தை மிகச் சிறப்பாக வழங்கி வருகிற செயின்ட் பிரிட்டோ அகாடமியின் செயலாளராக விளங்குபவர் மதிப்பிற்குரிய டாக்டர்.விமலா ராணி பிரிட்டோ அவர்கள். தனது கணவரும் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் கெர்ரி இன்டெவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான சேவியர் பிரிட்டோவுடன் இணைந்து செயின்ட் பிரிட்டோஸ் அகாடமியை நிறுவிய டாக்டர் விமலா ராணி பிரிட்டோ அவர்கள் VKAN-V சொல்யூஷன்ஸ் தலைவராகவும், கெர்ரி இண்டேவ் லாஜிஸ்டிக்ஸ் இயக்குநராகவும், எஸ்தெல் ஹோட்டல் & ரிசார்ட்ஸின் நிர்வாக இயக்குநராகவும், எஸ்தெல் ஹோம்ஸின் இயக்குநராகவும் திகழ்கிறார். 

கடின உழைப்பின் அடையாளமாய் விளங்கும் மதிப்பிற்குரிய டாக்டர்.விமலா ராணி பிரிட்டோ அவர்களின் செயின்ட் பிரிட்டோ அகாடமி தற்போது வெற்றிகரமாக 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. 25 ஆண்டுகளைக் கடந்த வெற்றிகரமான கல்வி நிறுவனம் என்ற பெருமை மட்டுமல்லாது தங்களது பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசாங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்குவது போலவே பென்ஷன் வழங்கக்கூடிய ஒரு தனியார் கல்வி நிறுவனம் என்ற மிகப்பெரிய பெருமையையும் தாங்கி நிற்கிறது செயின்ட் பிரிட்டோ அகாடமி. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த Dr.விமலா ராணி அவர்கள் தங்களது சாதனை பயணத்தின் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசும்போது, “உங்களது பள்ளியில் வேலை பார்க்கும் எல்லா ஆசிரியர்களுக்கும் சம்பளம் என்பதைத் தாண்டி பொதுவாகவே தனியார் பள்ளிகளில் வேலை பார்க்கும் போது பிரஷர் நிறைய இருக்கும் ஆனால் அவர்களுக்கு பென்ஷன் என்கிற ஒரு திட்டம் அரசாங்கத்தை தாண்டி வேறு எங்கும் இருக்காது... இதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி தோன்றியது? எனக் கேட்டபோது, 

“இப்போது பார்த்தீர்கள் என்றால் ஆசிரியர்கள் நமக்காக அர்ப்பணிக்கிறார்கள் அவர்களுக்கு நாம் என்ன திருப்பி செய்யப் போகிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இன்னொரு விஷயம் என்னவென்றால் என்னிடம் வேலை பார்ப்பவர்கள் பொதுவாகவே ஒரு வீட்டில் வேலை பார்த்து பணம் சம்பாதிப்பவர்களுக்கு இருக்கும் ஒரு மரியாதையும் பணம் சம்பாதிக்காதவர்களுக்கு இருக்கும் மரியாதையும் நான் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. கையில் ஒரு பத்து பைசா இருந்தாலும் தனி மரியாதை தான் அப்படி இருக்கும்போது அவர்களுடைய வேலைக்குப் பிறகு அவர்கள் வேறு யாரையும் நம்பி இருக்கக் கூடாது. அவர்களுக்கு அவர்கள் கையில் இருக்கும் போது, “இந்தாப்பா இன்று பிறந்த நாளா?” என அவர்கள் பண்ணும் போது அதை பெற்றுக் கொள்ளும் போது அந்த குழந்தைகளுக்கு ஒரு சந்தோஷம் அது முற்றிலும் வேறு” என பதில் அளித்திருக்கிறார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட Dr.விமலா ராணி அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

 

Leave a Comment