உழைப்பே உயர்வு என்று நிருபித்த வசந்த் & கோ.. - முதல் கிளை குறித்த சுவாரஸ்யமான தகவல் உள்ளே..

உழைப்பே உயர்வு என்று நிருபித்த வசந்த் & கோ.. - முதல் கிளை குறித்த சுவாரஸ்யமான தகவல் உள்ளே.. - Daily news

கடைக்கோடி கிராமம் முதல் நன்கு வளர்ந்த நகரம் வரை பரவாலாக இன்று விரவிக் கிடக்கும் வசந்த் & கோ நிறுவனத்தின் முதல் கிளை தொடங்கப் பட்ட நாள் இன்று. (ஜூலை 16) கடந்த 45 ஆண்டுகளாக எளிய மக்களின் நம்பிக்கையை சேகரித்து கடல் தாண்டி உலகம் முழுவதும் புகழை உயர்த்தி இன்று இந்தியாவின் நம்பர் ஒன் டீலராக வளர்ந்து நிற்கும் நிறுவனம் வசந்த் & கோ. சிறு துளி பெருவெள்ளம் என்ற கூற்றுக்கிணங்க மக்களின் மனங்களை சிறுக சிறுக நம்பிக்கையின் மூலம் இடம் பிடித்து இன்று மிகப்பெரிய ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்துள்ளது. கடைக்கோடி மக்களுக்கும் அத்யாவசிய பொருட்கள் கிடைத்திட வேண்டுமென தவணை திட்டத்தில் பொருள்கள் விற்பனை செய்வதும் விற்பனைக்கு பிந்தைய சேவை செய்வது போன்ற பல முன்னெடுப்புகளை செய்து அனைவரின் சௌகரியத்திற்கு ஏற்ப வழி வகை செய்து வருகிறது. புதுமையான அதி தொழில்நுட்பங்களை மக்களுக்கு அறிமுகப் படுத்தி இன்றும் தொலைநோக்கு பார்வையுடன் உழைத்து கொண்டிருக்கும் ஒரே நிறுவனம் நம் வசந்த் & கோ.

உழைப்பால் உயர்ந்தவர் என்ற கோட்பாட்டின் கீழ் எந்தவொரு நோக்கமும் இடை மீறாமல் பயணித்து கொண்டிருக்கும் வசந்த் & கோ நிறுவனத்தின் உயிர் மூச்சாய் விளங்கும் மாமனிதர் வசந்த குமார். அயராமல் உழைத்த மாமனிதனின் இழப்பிற்கு பின்னும் விஜய் வசந்த் M.P., அவர்கள், வினோ வசந்த் மற்றும் தங்கமலர் ஜெகன்நாத் ஆகியோர் ஒன்றிணைந்து வசந்தகுமார் அவர்கள் வகுத்த பாதையில் தடம் மாறாமல் மக்களுக்கான நம்பிக்கையை மேலும் அதிகரித்து வருகின்றனர்.

காலத்தால் அழியாத புகழை கொண்டுள்ள வசந்த் & கோ நிறுவனத்தின் முதல் கிளை தொடங்கப்பட்ட நாள் இன்று.. (ஜூன் 16). பல தொழில்முனைவோருக்கு முன்னுதாரணமாக விளங்கும் வசந்த் அண்ட் கோவின் இந்த வரலாற்று நிகழ்வு குறித்து வசந்த குமாரின் இளைய மகன் வினோத் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “46 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் (July 16) வசந்த் & கோ நிறுவனத்தின் முதல் நாள் திறக்கப் பட்டது.” என்று குறிப்பிட்டு திறப்பு விழாவில் குத்து விளக்கு ஏற்றும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனுடன்  கடந்த  1964 ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘பச்சை விளக்கு’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்ற பாடலுடன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் வினோத் வசந்த குமார். மேலும் இந்த பாடல் அவரது தந்தையும் வசந்த் அண்ட் கோ நிறுவனருமான வசந்த குமாருக்கு பிடித்தமான பாடல் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இவரது பதிவு வசந்த குமாரின் நல விரும்பிகள் மற்றும் பின் தொடர்பவர்கள் மற்றும் பொது மக்கள் வாழ்த்து தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர்  

 

View this post on Instagram

A post shared by Vinoth Vasanthakumar (@vinoth3335)

 

Leave a Comment