கோவைக்கு பெருமை சேர்க்கும் மாபெரும் நிகழ்வு.! - 20 நாடுகளை சேர்ந்த முக்கியஸ்தர்களுடன் ஈஷா யோகா மையத்தில் முக்கிய மாநாடு.. விவரம் உள்ளே..

கோவைக்கு பெருமை சேர்க்கும் மாபெரும் நிகழ்வு.! - 20 நாடுகளை சேர்ந்த முக்கியஸ்தர்களுடன் ஈஷா யோகா மையத்தில் முக்கிய மாநாடு.. விவரம் உள்ளே.. - Daily news

இந்தியாவில் நடைபெற்று வரும் G20 மாநாட்டின் ஒரு அங்கமாக விளங்கும் S20  என்ற அறிவியல் மாநாடு கோவை ஈஷா யோகா மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. இந்த மாபரும் மாநாடு கோவைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த மாபரும் அறிவியல் 20 அமர்வு கூட்டத்தில் 20 முக்கிய நாடுகளில் இருந்து அந்நாட்டின் சிறந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், வல்லுனர்கள் மற்றும் சட்டம் இயற்றும் திறன் படைத்தவர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொள்கின்றனர். அமர்வையடுத்து சத்குரு உடனான சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த அறிவியல் 20 கூட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய பிரதிநிதிகள் பசுமை எரிசக்தி, முழுமையான ஆரோக்கியம், சமூத்துடன் அறிவியலை இணைப்பது போன்று அறிவியல் மற்றும் சூழலியல் சார்ந்த தலைப்புகளில் மூன்று கூட்டங்களாக நடத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சி கோயம்புத்தூர் ஈஷா யோக மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் முந்தைய நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொகுத்து வழங்கி அதுகுறித்து கலந்துரையாடவுள்ளனர்.  

ஈஷாவில் G20 மாநாடு நடக்க இருப்பது தொடர்பாக சத்குரு அவர்கள் கூறுகையில், “G20 கூட்டங்கள் ஆன்மீக மையம் உட்பட பல்வேறு விதமான இடங்களில் நடத்தப்படுவது மிகவும் சிறப்புக்குரியது. பாரதத்தை உணர்வதற்கு இது சிறந்த வழியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

நிகழ்சியில் பங்கேற்கும் சர்வதேச பிரதிநிதிகள் நேற்று முதலே ஈஷாவிற்கு வருகை தர தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு ஈஷா யோக மையத்தினர் உற்சாக வரவேற்பை அளித்து வரவேற்றனர். மேலும் இந்த மாபெரும் நிகழ்வில் G20 பிரதிநிதி சந்திப்பு நடைபெறும் 2 நாட்களில் யோகா அறிவியல் குறித்த கல்வி அமரவும் இடம் பெறவுள்ளது. இந்த அமர்வை ஹார்டுவர்டு மருத்துவ பள்ளியின் பேராசிரியரும் விழுப்புனர்வான உலகிற்கான சத்குரு மையத்தின் இயக்குனருமான டாக்டர் பாலசுப்பிரமணியம் நடத்தவுள்ளார்  அதனுடன் சர்வதேச பிரதிநிதிகள் ஈஷா மையத்தில் உள்ள தியானலிங்கம், லிங்கபைரவி, தீர்த்த குண்டங்கள் அகிய இடங்களுக்கு செல்ல உள்ளனர். மேலும் கலாச்சார நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்கள் களரப்பயட்டு மற்றும் பரத நாட்டியத்தின் மூலம் பாரதத்தின் பாரம்பரியத்தை பறைச்சாற்ற உள்ளனர்.  

 

Volunteers from Isha Foundation extend a warm welcome to the esteemed delegates arriving in Coimbatore for a key Science-20 meeting at Isha Yoga Center as part of G20.#G20India #Science20@g20org @S20_India pic.twitter.com/J9Zu5CzIuP

— Isha Foundation (@ishafoundation) July 20, 2023

Leave a Comment