"பிக் பாஸ் ரசிகர்களே ரெடியா..!- பிக் பாஸ் தமிழ் சீசன் 7 எப்போது ஆரம்பம்?"- அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு! ட்ரெண்டிங் ப்ரோமோ இதோ

அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி,bigg boss tamil season 7 starts from october 1st | Galatta

தமிழக சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஒவ்வொரு வருடமும் ரசிக்கப்படும் ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். அந்த வகையில் இதுவரை ஆறு சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகன் ராவ், நான்காவது சீசனில் ஆரி அர்ஜுனன் மற்றும் ஐந்தாவது சீசனில் ராஜு ஜெயமோகன் ஆகியோர் பிக் பாஸ் டைட்டிலை வென்றனர். இந்த வரிசையில் ரசிகர்களின் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 2022ம் அக்டோபர் 9ம் தேதி தொடங்கியது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல்முறையாக GP முத்து, அஸீம், அசல் கோலார், ஷிவின் கணேசன், ராபர்ட் மாஸ்டர், ஷெரினா, ராம் ராமசாமி, ADK-ஆர்யன் தினேஷ் கனகரத்னம், ஜனனி, அமுதாவாணன், VJ மகேஷ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலக்ஷ்மி, ரச்சிதா மகாலக்ஷ்மி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், விக்ரமன், குயீன்ஸ் ஸ்டான்லி, நிவிஷினி, 20 போட்டியாளர்கள் களமிறங்கினர். 

வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல நடிகை மைனா நந்தினி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தின் தொடக்கத்திலேயே பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இவரைத் தவிர இந்த சீசனில் வேறு யாரும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையவில்லை அதேபோல் எவிக்ட் ஆனவர்களும் ரீ-என்ட்ரி கொடுக்கவில்லை. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசிம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் அறிவிப்பு வெளியானது. வழக்கம்போல் பிக் பாஸ் குறித்த அறிவிப்பு வந்த உடனே இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் பிரபலங்கள் யார் யார் என்ற கணிப்புகளும் பேச்சுகளும் வரும் நாட்களில் சமூக வலைதளங்களில் நிறைந்து இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் ஆரம்பத்திலேயே 20 போட்டியாளர்கள் களமிறங்க உள்ளனர் ஆனால் இந்த முறை புதியதாக பிக் பாஸில் இரண்டு வீடுகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக பிக் பாஸ் வீட்டில் சண்டை வந்தால் வீடு இரண்டாகும் இந்த முறை பிக் பாஸில் வீடு இரண்டாக இருக்கிறது. 

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. அடுத்த மூன்று சீசங்கள் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது. எனவே இந்த ஏழாவது சீசனும் அக்டோபர் மாதத்தில் தான் தொடங்கும் என எதிர்பார்க்கப்பபட்டது. அந்த வகையில் வருகிற அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பமாவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான துவக்க விழா நடைபெறுகிறது. இதனை அறிவிக்கும் வகையில் தற்போது அட்டகாசமான புதிய ப்ரோமோ வீடியோவும் வெளிவந்துள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.