'தளபதி விஜயின் அதிரடியான லியோ பட இசை வெளியீட்டு விழா எப்போது?'- இயக்குனர் மிஷ்கின் கொடுத்த HINT! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தளபதி விஜயின் லியோ பட இசை வெளியீட்டு விழா பற்றி பேசிய மிஷ்கின்,mysskin shared thalapathy vijay in leo movie audio launch date | Galatta

தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்பது குறித்து இயக்குனர் மிஷ்கின் பேசியிருக்கிறார். மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் படம் தான் லியோ. தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 

முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் LCUல் இடம் பெறும் பட்சத்தில் விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் இல் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வந்தது போல இந்த படத்திலும் ஏழாவது ஒரு முன்னணி நட்சத்திரம் மிரட்டலான ஒரு கதாபாத்திரத்தில் சர்ப்ரைஸாக வரலாம் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 125 நாட்கள் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. 

அதற்கான இறுதி கட்டப் பணிகளும் மிரட்டலான VFX பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பஸ்ட் லுக் போஸ்டரில் இடம் பெற்ற கழுதைப்புலி உடனான சண்டைக் காட்சியின் VFX பணிகள் அனைத்தும் தற்போது பெங்களூரில் உள்ள முன்னணி VFX நிறுவனத்தில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. தளபதி விஜயின் திரைப் பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் லியோ திரைப்படத்தை உலக அளவில் மிக பிரம்மாண்டமாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தில் ஆறு வாரங்களுக்கு முன்பேயோ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில் அட்வான்ஸ் புக்கிங் அதிரடியாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த முக்கிய தகவலை இயக்குனர் மிஷ்கின் அவர்கள் பகிர்ந்து கொண்டார். இன்று செப்டம்பர் 15ஆம் தேதி சென்னையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, "லியோ படம் நன்றாக வந்திருப்பதாக கேள்விப்பட்டேன் இந்த படம் நிச்சயம் பெரிய வெற்றி அடையும் 30ஆம் தேதி பார்க்கலாம்" என தெரிவித்துள்ளார் எனவே வருகிறார் செப்டம்பர் 30ஆம் தேதி தளபதி விஜயின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.