உறவினரான 65 வயது மூதாட்டியின் உதவியுடன், 24 வயது கர்ப்பிணி பெண்ணை 2 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ள அம்புக்கோவிலைச் சேர்ந்த 40 வயதான ஜெயபாரத், தனது 24 வயது மனைவி மாரியம்மாள் உடன் வசித்து வருகிறார். 24 வயதான மாரியம்மாள் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். 
 
இந்த சூழ்நிலையில், கணவன் ஜெயபராத் எப்போதும் போல வேலைக்குச் சென்று உள்ளார். அப்போது, அவர் மனைவி கர்ப்பிணி பெண்ணான மாரியம்மாள் வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, மாரியம்மாளின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த 65 வயதான அஞ்சலை என்ற மூதாட்டி, மாரியம்மாள் வீட்டிற்கு வந்து உள்ளார்.

“தனது வீட்டிற்கு உறவினர்கள் வந்திருப்பதாகவும், அவர்கள் உன்னைப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள் என்றும், அவர்களுக்கு உன்னை நன்றாக தெரியும்” என்று, ஏதேதோ பேசி அந்த கர்ப்பிணி பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.

அதன் படியே, கர்ப்பிணி பெண்ணான மாரியம்மாளும், அந்த மூதாட்டியின் வீட்டிற்குச் சென்று உள்ளார். அந்த பெண் வீட்டின் உள்ளே சென்றதும், அந்த பெண்ணை வீட்டிற்கு உள்ளே வைத்து, வெளிப்புறமாகக் கதவை மூடிவிட்டு, அந்த மூதாட்டி அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளார்.

அதன் பிறகு, அந்த வீட்டில் மறைந்திருந்த இடையன் கொல்லைப்பட்டியைச் சேர்ந்த 51 வயதான ராஜேந்திரன் மற்றும் 41 வயதான அண்ணாத்துரை ஆகிய இருவரும் சேர்ந்து, கர்ப்பிணியான மாரியம்மாளை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாரியம்மாள், அவர்களிடம் இருந்து மிக கடுமையாகப் போராடி உள்ளார். ஆனாலும், இந்த போராட்டம் பொய்த்துப் போனது.

இதனையடுத்து, வீடு திரும்பிய மாரியம்மாள், தனது கணவன் வரும் வரை அழுதுகொண்டே இருந்து உள்ளார். மாலையில் கணவன் வந்ததும், தனது கணவர் வந்ததும் கணவன் ஜெயபாரத்திடம் தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் பற்றி கூறி இருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த ஜெயபாராத், தனது மனைவி மாரியம்மாளுடன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர், ராஜேந்திரன் மற்றும் அண்ணாதுரை ஆகியோரை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்குப் பிறகு, அவர்களிடம் ஒப்புதல் வாக்கு மூலம் பெற்ற போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர். அத்துடன், இந்த வழக்கில் கர்ப்பிணி பெண்ணை ஏமாற்றி அழைத்து வந்து, இந்த பாலியல் பலாத்காரத்திற்கு மூலையாகச் செயல்பட்டு தற்போது தலைமறைவாக இருக்கும் மூதாட்டியையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.