தாயின் 2 வது கணவன், 9 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த 33 வயதான பெண் அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது கணவருடன் (சரவணன்) வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகள் உள்ளனர்.

மகிழ்ச்சியாக சென்ற இவர்களது திருமண வாழ்வில், அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, கணவன் - மனைவி இருவரும் சண்டை போட்டுக் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டனர்.

இதனால், இரு பிள்ளைகளுமே, தாயாரிடமே வளர்ந்து வருகின்றனர். அதில் மகளுக்கு தற்போது 14 வயதும், மகனுக்கும் 13 வயதும் ஆகிறது.

தற்போது, அந்த பெண் தனது இரு குழந்தைகளின் படிப்பு செலவிற்காக அந்த பகுதியில் கட்டட வேலை மற்றும் கூலி வேலைக்கு சென்று வந்தார். 

அப்போது, வேலைக்கு சென்ற இடத்தில், அங்கு அந்த பெண்ணுக்கு கொத்தனாராக வேலைப் பார்த்து வந்த 34 வயதான பார்த்திபன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில், இரு பிள்ளைகளின் 33 வயதான தாயார், கொத்தனார் பார்த்திபனை கடந்த ஆண்டு 2 வதாக திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து, தனது மனைவியின் முதல் கணவனுக்கு பிறந்த 14 வயது மகளை, தனது மளாக பார்க்காமல், அந்த சிறுமி மீது சபலப்பட்ட பார்த்திபன், அந்த சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்

அத்துடன், “இந்த பாலியல் பலாத்காரம் குறித்து வெளியே சொன்னால், நீ அவ்வளவு தான், உன்னை கொன்றே விடுவேன்” என்றும், பார்த்திபன் தொடர்ந்து மிரட்டி வந்திருக்கிறார்.

இதனால், பயந்து போன அந்த சிறுமி, தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் சம்பவம் பற்றி வெளியே யாரிடமும் எதுவும் கூறாமல் இருந்து உள்ளார். 

இப்படியாக, சிறுமியின் பயத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பார்த்திபன், தனது மனைவியின் மகளை கடந்த 7 மாத காலமாகத் தொடர்ந்து மிரட்டி மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளார்.

இதனால், அந்த 14 வயது சிறுமி கர்ப்பம் அடைந்து உள்ளார். இதன் காரணமாக, சிறுமியின் வயிறு சற்று பெரிதாகத் தெரிய ஆரம்பித்து உள்ளது. அத்துடன், சிறுமியின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன.

இதனைக் கவனித்த சிறுமியின் தாயார், சிறுமியிடம் சென்று, “உன் வயிறு ஏன் பெரிதாக இருக்கிறது?” என்று, விசாரித்து உள்ளார்.

இதனால், வேறு வழியில்லாமல் “இதற்கு உன் புருஷன் பார்த்திபன் காரணம். கடந்த 7 மாதங்களாக அவன் என்னைத் தொடர்ந்து மிரட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தான்” என்று கூறி, கதறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த தாயார், உடனடியாக தனது மகளை அழைத்துக்கொண்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்குச் சென்று உள்ளார். அங்கு, சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், “சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக” கூறி உள்ளனர்.

இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், உடனடியாக இது குறித்து அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணின் 2 வது கணவனான பார்த்திபனை அழைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில், “சிறுமியை கடந்த 7 மாத காலமாக, பாலியல் பலாத்காரம் செய்து வந்ததை” பார்த்திபன் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, பார்த்திபனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.