கல்யாணம் ஆன 6 மாதத்தில் தனது கணவனை விவகாரத்து செய்த மனைவி, தனது மாமனாரை 2 வதாக திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் பவுடன் எனும் பகுதியைச் சேர்ந்த சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்த சரவணன், கடந்த 2016 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து உள்ளார். அந்த பெண்ணும், இவரைக் காதலித்த நிலையில், அவர்கள் இருவரும் அந்த பகுதியில் காதலர்களாக ஊர் சுற்றி தங்களது காதலை மேலும் வளர்த்து வந்தனர்.

இதனையடுத்து, அந்த பெண்ணை கடந்த 2016 ஆம் ஆண்டு, சரவணன் இரு வீட்டார் முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
 
திருமணத்திற்குப் பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

அதாவது, திருமணம் ஆன அடுத்த 6 மாத காலத்திற்குள் கணவன் - மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்டு, அவர்கள் இருவருமே விவகாரத்து பெற்றுப் பிரிந்து உள்ளனர்.

இந்த தம்பதிக்கு விவகாரத்து கிடைத்த நாள் முதல் சரவணனின் தந்தை வீட்டில் இருந்து திடீரென்று மாயமானார். 

இதனால், அதிர்ச்சி அடைந்த இளைஞர் சரவணன், சில நாட்கள் தனக்கு தெரிந்த இடத்தில் தனது தந்தையைத் தேடிப் பார்த்து உள்ளார். ஆனால், எங்குத் தேடியும் தந்தை கிடைக்காத நிலையில், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் தனது தந்தையைக் காணவில்லை என்று, அவர் புகார் அளித்து உள்ளார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த இளைஞரின் தந்தையைத் தேடி வந்தனர். அப்போது, போலீசாருக்கு ஒரு மாபெரும் அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விசாரணை நடத்திய போலீசார், புகார் அளித்த இளைஞரை சம்மந்தப்பட்ட காவல் நிலையம் நேரில் வரவழைத்து, அவரிடம் ஒரு போட்டோவை காட்டி உள்ளனர்.

அந்த போட்டோவைப் பார்த்த அந்த நொடியே, அந்த இளைஞர் சுக்கு நூறாக நொறுங்கிப் போய் உள்ளார். 

அதாவது, போலீசார் காட்டிய அந்த போட்டோவில் “ஆசை ஆசையாகக் காதலித்து திருமணம் செய்து பிறகு விவாகரத்து பெற்ற தன் மனைவியும், தனது  தந்தையும் மாலையும் - கழுத்துமாக நிற்பது போல்” அந்த போட்டோவில் போஸ் கொடுத்து நின்று உள்ளனர். 

இது குறித்து, போலீசார் அவர்களை அழைத்து விசாரணை நடத்தியதில், “அந்த பெண், தன்னுடைய மாமனாரை 2 வதாக கல்யாணம் செய்துகொண்டு, தனது கணவராக ஏற்றுக்கொண்டதாகவும், மாமனாரான கணவனுடன் தற்போது மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், இவருடனே வாழ ஆசைப்படுவதாகவும், இனி எங்களை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்றும், அந்த பெண் போலீசாரிடம் கூறிவிட்டதாகவும்” போலீசார், அந்த இளைஞனிடம் தெரிவித்து உள்ளனர்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞன் சரவணன், சுக்கு நூறாக மனம் நொறுங்கிப் போய், வீடு திரும்பி உள்ளார். இச்சம்பவம், அந்த பகுதி முழுவதும் பரவிய நிலையில், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.