யூரோ கோப்பை புட்பால் 2 ஆம் அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி, டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளதன் மூலமாக,  தோல்வியையே சந்திக்காத அணிகளாகத் திகழும் இத்தாலி - இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் சம்பவம் செய்கின்றன.

ஐரோப்பாவின் முன்னணி அணிகள் மோதும் யூரோ கால்பந்து தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. 

நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் - இத்தாலி அணிகள் சம்பவம் செய்தன. இதில், இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி பெனால்டி ஷூட் நோக்கிச் சென்றது. இந்த பெனால்டி வாய்ப்பில், 4-2 என்ற கணக்கில், ஸ்பெயின் அணியை வீழ்த்தி, இத்தாலி அணி முதல் அணியாக யூரோ கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

அதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலை நேரத்தில் நடைபெற்ற யூரோ கோப்பை 2 ஆம் அரையிறுதியில் இங்கிலாந்து -  டென்மார்க் அணிகள் மோதின. சிவப்பும் - வெள்ளையும் மோதிக்கொண்ட யுத்தம் போல் இருந்தது இந்த புட்பால் மேட்ஜ். 

இந்த தொடர் முழுவதும் இங்கிலாந்து அதிரடியாக விளையாடும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்க அந்த இங்கிலாந்தையே தொடக்கத்தில் திணறடித்தது கெத்துக் காட்டியது டென்மார்க் அணி. 

இதில், டென்மார்க் தனது முதல் கோலை அடித்து இங்கிலாந்தை இன்னும் திணறடித்தது. மைக்கேல் டாம்ஸ்கார்ட், ஃப்ரீ கிக்கில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் அடித்த கோலானது, இங்கிலாந்து வீரர்களையே அப்படியே ஆட்டம் காண வைத்தது. 

ஆனால், அதன் பிறகு தான் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. பின்னர், தனது பழைய ஆட்டத்தை மீண்டும் காலில் எடுத்த இங்கிலாந்து அணி, அதன் பிறகு, எகிறி அடிக்க ஆரம்பித்தது.

அதாவது, அடுத்த 10 நிமிடங்களுக்குள்ளாகவே ஈக்குவலைசர் கோல் அடித்து அசத்தியது இங்கிலாந்து அணி. 

2 வது பாதி முழுக்க 2 டாவது கோலை அடித்துவிட வேண்டும் என துடியாய் துடித்துக்கொண்டு இருந்தது சிவப்பும் - வெள்ளையும்.

ஆனால், இந்த முறை இங்கிலாந்தின் கால்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தின. பெரும்பான்மையாக டென்மார்க்கின் கோல் போஸ்ட் பக்கமே சிவப்பு - வெள்ளை யுத்தம் நடந்துகொண்டிருந்தது. ஆனாலும், டென்மார்க் கோல் கீப்பர் காஸ்ப்பர் ஷிமைக்கல் ஒன்றை மனிதனாக இங்கிலாந்தின் தாக்குதலைத் தடுத்து நிறுத்திக்கொண்டே இருந்தார். 

இதனால், ஆட்டம் 1-1 என்று முடிந்து, அதன் தொட்ச்சியாக எக்ஸ்ட்ரா நேரமும் கொடுக்கப்பட்டது. இதனால், ஆட்டத்தின் விறுவிறுப்பு இன்னும் தொற்றிக்கொண்டது.

இதில், எதிர்பாரத விதமாக பெனால்ட்டி கிக் இங்கிலாந்துக்குக் கிடைத்த நிலையில், கேப்டன் ஹேரி கேன் அடித்த பந்தை கோல் கீப்பர் ஷிமைக்கல் மிகவும் அற்புதமாகத் தடுத்தார். ஆனால், அவர் கையில் இருந்து பந்து, மீண்டும் ஹேரி கேனை நோக்கி வரவே, அவர் வேகமாக ஓடிச் சென்று அந்த பந்தை மீண்டும் கோல் போஸ்ட்டை நோக்கி எட்டி உதைத்தார். அது, அப்படியே கோலாக மாறிப்போனது. இதனால், இங்கிலாந்து 2-1 என வென்றது.

2-1 என்ற கோல் கணக்கில் உச்ச பட்மான பதற்றமான போட்டியில் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி, கடந்த 1966 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு, கிட்டதட்ட 55 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக யூரோ கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது. 

குறிப்பாக, யூரோ கால்பந்து தொடரிலேயே, முதல் முறையாக இறுதிப்  போட்டிக்குள்ளும் இங்கிலாந்து அணி நுழைந்திருக்கிறது. இதன் மூலமாக, 
இங்கிலாந்து புதிய வரலாறு படைத்திருக்கிறது.

இதனையடுத்து, இந்த யூரோ கோப்பை தொடரில் இது வரை தோல்வியையே சந்திக்காத அணிகளா வலம் வந்துக்கொண்டிருக்கம் இத்தாலி - இங்கிலாந்து என 2 அணிகளும் சம பலத்துடன், இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டு சம்பவம் செய்கின்றன.

இத்தாலி - இங்கிலாந்து அணிகள் சம்பவம் செய்யப்போகும் யூரோ 2020 புட்பால் இறுதிப் போட்டியானது, ஞாயிறு நள்ளிரவில் நடைபெறுகிறது. இதனால், புட்பால் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தே அன்றைய தினம் காத்திருக்கிறது.