கல்யாணமான பள்ளி தோழனுக்கு, காம வலை விரித்த 22 வயது இளம் பெண், தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பணம் பறித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் அதுவும் கோவையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோயம்புத்தூர் தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருமணம் ஆன இளைஞன் ஒருவனுடன், அவருடைய பள்ளி தோழி ஒருவர், நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு, ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் ஆகி உள்ளார். 

22 வயதாகும் அந்த இளம் பெண், மயக்கும் விதமாக ஃபேஸ்புக்கில் பேசி, அந்த திருமணம் ஆன பள்ளி தோழனை தனது காம வலையில் வீழ்த்தி இருக்கிறார்.

அத்துடன், ஃபேஸ்புக்கில் தொடர்ந்து ஆபாச சாட்டிங், தனது ஆபாசப் படங்களையும் பகிர்ந்துகொண்டு, தனது பள்ளி தோழரை கிரங்கடித்து வந்தார்.

இப்படியான, இந்த பழக்கத்தில் தனது பள்ளி தோழன் நன்றாக வசதியாக இருப்பதைத் தெரிந்துகொண்ட அந்த பெண், அவரிடம் இருந்து அவசரத் தேவை என்று கூறி, 23 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்று உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, அவர்களுக்குள் ஆபாச சாட்டிங் தொடர்ந்த நிலையில், அந்த கல்யாணம் ஆன நண்பனை, தனிமையாகச் சந்திக்க வேண்டும் என்று கூறி, கோவை ஆனைக்கட்டி பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டிற்கு தனியாக வரவழைத்து உள்ளார்.

குறிப்பிட்ட அந்த ரிசார்ட்டில் திருமணம் ஆன பள்ளி தோழனும், அந்த 22 வயதான பெண்ணும், படுக்கை அறையில் மிகவும் நெருக்கமாக இருக்கும் போது, அங்கு ஏற்கனவே வந்து பதுங்கியிருந்த அந்த பெண்ணின் ஆண் நண்பர்கள் 2 பேரும், அதனை தங்களது செல்போனில் போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு, அந்த திருமணம் ஆன இளைஞனை மிரட்டி பணம் கேட்டு உள்ளனர்.

அப்போது, பள்ளி தோழியான அந்த பெண்ணும், தனது பள்ளி தோழன் என்று கூட பார்க்காமல், அந்த இளைஞனை அடித்து உதைத்து, அந்த இளைஞனிடம் இருந்த பணத்தை எல்லாம் பறித்துக்கொண்டு உள்ளார்.

மேலும், இருவரும் படுக்கை அறையில் மிகவும் நெருக்கமாக இருக்கும் படத்தை காட்டி, அந்த பெண் பல லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்.

இதனால், பயந்து போன அந்த இளைஞர், பணம் கொடுப்பதற்கு 2 நாட்கள் டைம் கேட்டிருக்கிறார். அதனை நம்பிய அந்த கும்பல், சரி என்று சம்மதம்  சொல்லியிருக்கிறது. இதனையடுத்து, வீடு திரும்பிய அந்த இளைஞன், தன்னை காம வலையில் வீழ்த்தி, பணம் பறித்த தனது பள்ளித் தோழி குறித்தும், அந்த பெண்ணின் ஆண் நண்பர்கள் பற்றியும் அங்குள்ள தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இது குறித்து ரகசியமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அந்த பெண் உட்பட அந்த பெண்ணின் கூட்டாளிகளான 23 வயதா ஆபீப் அலி, 25 வயதான அப்துல்கலாம் ஆகிய 2 பேர் என மொத்தம் 3 பேருமாகச் சேர்ந்து, இது போன்று பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, பணம் பறித்த அந்தப் பெண்ணையும், அவரது கூட்டாளிகள் இருவரையும் போலீசார் சுற்றி வலைத்து அதிரடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.