ஜெயம்கொண்டான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கண்ணன். பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன ஜப் வி மெட் திரைப்படத்தின்  தமிழ் ரீமேக்காக நடிகர் பரத் மற்றும் நடிகை தமன்னா இணைந்து நடித்த கண்டேன் காதலை திரைப்படத்தை இயக்கியிருந்தார்.தொடர்ந்து வந்தான் வென்றான் ,சேட்டை , ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, இவன் தந்திரன் , பூமராங் , பிஸ்கோத் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

அடுத்ததாக இயக்குனர் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சிவா மற்றும் யோகிபாபு இணைந்து நடிக்கவுள்ளனர். இயக்குனர் ஆர்.கண்ணனின் தயாரிப்பு நிறுவனமான மாசாலா பிக்ஸ் மற்றும் MKRP பிக்சர்ஸ் சார்பில் M.K.ராம் பிரசாத் இணைந்து தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்தில் நடிகர்கள் சிவா & யோகி பாபு உடன் இணைந்து கருணாகரன், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் கண்ணனின் மசாலா பிக்ஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலகலப்பான நகைச்சுவை திரைப்படமாக தயாராகிறது இந்த புதிய திரைப்படம். தமிழில் எழுபதுகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டான காசேதான் கடவுளடா திரைப்படத்தின் ரீமேக்காக இத்திரைப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை இந்த ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அடுத்தடுத்த புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக தெலுங்கில் சூப்பர் ஹிட்டான நின்னுக்கோரி திரைப்படத்தின் ரீமேக்-ஆக தமிழில் நடிகர் அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடித்த தள்ளிப்போகாதே படம் தயாராகி விரைவில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.