உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த காதல் ஜோடிகளான சூர்யா - தமன்னா, இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்றபோது போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், போலீசார் பல்வேறு இடங்களில் தற்போது போலீசார் தீவிரமாக கண்கணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல், சென்னை மற்றும் கோவை போன்ற நகரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் படி, கோவை உதவி கமி‌ஷனர் அருண், பீளமேடு காவல் ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார் பீளமேடு அடுத்த நேரு நகரில் உள்ள வீரியம் பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர், இளம் பெண்ணுடன் சுற்றித் திரிந்து உள்ளார். அவரை பார்த்து சந்தேகப்பட்ட போலீசார், அவரை வழி மறித்து அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் இன்னும் சந்தேகம் டைந்த போலீசார், அந்த இளைஞனிடமும் இளம் பெண்ணிடமும் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாகவே பதில் பேசி உள்ளனர். 

இதனால், இன்னும் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், கோவை மாவட்டம் காந்தி நகரை சேர்ந்த 21 வயதான சூர்யா என்கிற சூரிய பிரகாஷ், அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்த நிலையில், தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.

அதே போல், விருதுநகரை சேர்ந்த 21 வயதான தமன்னா என்கிற வினோதினி கோவையில் நர்சிங் படித்து வந்தார். 

இந்த சூழலில், தமன்னா என்கிற வினோதினிக்கும், சூர்யா என்கிற சூர்ய பிரகாசுக்கும் அறிமுகம் ஏற்பட்டு, நண்பர்களாக பழகி வந்தனர். இவர்களுக்குள் உள்ளான இந்த பழக்கம், நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இதனையடுத்து, அந்த இளம் பெண்ணின் படிப்பு முடிந்ததும், அந்த பெண் ஊருக்குச் செல்லாமல், காதலனுடன் சேர்ந்து உல்லாசமாக ஊர் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அவர்கள் 2 பேரும் காந்தி மாநகர் பகுதியில் வீடு ஒன்றை வாடைக்கு எடுத்து உல்லாசமாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிகிறது. இப்படியான நிலையில் அவர்களுக்குள் செலவுக்குப் பணம் தேவைப்பட்டதால், வேறு என்ன செய்வது என்று யோசித்த அவர்கள், கஞ்சாவை வாங்கி அதிக விலைக்கு விற்று வந்தனர். இந்த நிலையில் தான், போலீசாரிடம் இருவரும் ஜோடியாக மாட்டிக்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார், நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் இருவரிடம் இருந்தும் மேலும் அவர்களிடம் இருந்து 2 கால் கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

இதனிடையே. உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இளம் காதல் ஜோடி கஞ்சா விற்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.