கருவுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை எடுத்துச் செல்வது நஞ்சுக்கொடி. இதை கொப்புள் கொடி என்று அழைப்பர். ஒரு பெண் கருவுற்றவுடன் கர்ப்பப்பையின் கீழ்ப்பகுதியில் உருவாகும் இந்த நஞ்சுக்கொடி, கர்ப்பகாலத்தின் ஏழாவது மாதத்துக்குப் பின்னர் கர்ப்பப்பையின் மேல் சுவரை நோக்கி நகர வேண்டும். அப்போதுதான் பிரசவத்தின்போது குழந்தை வெளிவர வழி அமையும். ஆனால் அப்படி மேல்நோக்கி நகராமல கீழ்நோக்கியே இருந்தால் அதை தான் `நஞ்சுக்கொடி இறக்கம்’.


இந்த நஞ்சுக்கொடி இறக்கத்துக்கு பல காரணங்கள் இருக்கிறது. முதலாவது காரணம், ஒன்றுக்கு மேற்பட்ட சிசேரியன் பிரசவங்கள் நடந்திருந்தால் இந்த பிரச்சனை உருவாகும். மேலும் அதிக முறை `டி அண்ட் சி’ செய்திருந்தாலும் நடக்கும். தாய்க்கு ரத்தச்சோகை இருந்தால், சிசுவின் எடை மூன்றரை கிலோவுக்கும் அதிகமாக இருந்தால், இரட்டைக் குழந்தை கர்ப்பம் இருந்தால், 40 வயதுக்கு மேல் கர்ப்பமானால் போன்றவை நஞ்சுக்கொடி இறக்கத்துக்கு காரணங்களாக அமைகிறது.

நஞ்சுக் கொடி இறக்கம் ஏற்பட்டால் , குறைப்பிரசவம் நடைபெற அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் அவர்களுக்கு சிசேரியன் பிரசவம்தான் வழி. ஆனாலும் இரத்தப்போக்கும் அதிகமாக இருக்கும். பிரவத்தின் போது குழந்தைக்கு ரத்த ஓட்ட பாதிப்பு, மூச்சுத்திணறல் ஏற்ப கூட வாய்ப்புகள் உண்டு. முதல் பிரசவத்தில் இந்த பிரச்சனை இருந்தால், இரண்டாவது பிரசவத்திலும் இதே பிரச்சனை ஏற்படும். 


தடுப்பது எப்படி?
ஏழாவது மாத ஸ்கேன் எடுக்கும்போதே கர்ப்பப்பையில் நஞ்சுக்கொடி எங்கே இருக்கிறது என்பது தெரிந்துவிடும். நஞ்சுக்கொடி கீழிறங்கி இருக்கும்பட்சத்தில் மருத்துவர்கள் ஆலோசனையை அவசியம் பின்பற்ற வேண்டும். ஏழாவது மாதத்தின் தொடக்கத்திலேயே கர்ப்பிணிகள் குழந்தையின் நுரையீரல் வளர்ச்சி, உடல் உறுப்பு வளர்ச்சிக்கு ஊசிகளைப் போட்டுக்கொள்வது நல்லது. தாம்பத்யம், பயணங்கள், உடற்பயிற்சிகள், கடினமான வேலைகள் போன்றவற்றை கர்ப்பிணிகள் அவசியம் தவிர்க்க வேண்டும்.