செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி படிப்படியாக சீரியல் நடிகையாகவும்,நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வளர்ந்தவர் ப்ரியா பவானி ஷங்கர்.டிவியில் இருந்த போதே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து கனவு கன்னியாக மாறியவர் ப்ரியா பவானி ஷங்கர்.இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் , தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வெற்றி நடிகையாக உருவெடுத்தார்.இதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர்,அருண் விஜயுடன் மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்த ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்கள் மனதில் ஒரு நல்ல நடிகையாகவும் இடம்பிடித்தார்.

இவர் நடிப்பில் வெளியான மேயாத மான்,கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர்  உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.இதனை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தியன் 2,எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை,ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் pelli choopulu ரீமேக் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இவர் நடித்துள்ள pelli choopulu தமிழ் ரீமேக்கின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கார்த்திக் குமார் இயக்கும் இந்த படத்திற்கு ஓ மணப்பெண்ணே என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இதனை தொடர்ந்து அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ப்ரியா.இந்த படத்தை ரவீந்திரன் தயாரிக்கிறார்.நாசர், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.சுமந்த் ராதாகிருஷ்ணன் இந்த படத்தை இயக்குகிறார்.

நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்ட ப்ரியா பவானி ஷங்கர்.மணமகன் தேவை என்று மாட்ரிமோனிக்கு எடுப்பது போல இருக்கிறது என்று ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.இது வெறும் போட்டோஷூட் மட்டும் தான் என்பது அவரது கேப்ஷன்கள் மூலம் தெரிகிறது.என்றாலும் சிலர் ப்ரியாவிற்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வருகின்றனர்.இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.