கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக நீக்காத நிலையில், உருமாறிய கொரோனா வைரஸ்  ஆப்பிரிக்கா மற்றும் பிரிட்டனில் பரவி ஆரம்பித்து இருக்கிறது.  இந்நிலையில் கேரளாவை அச்சுறுத்தி வருகிறது ஷிகெல்லா பாக்டீரியா. 


ஷிகெல்லா பாக்டீரியா, மருத்துவ துறைக்கு புதிய வைரஸ் இல்லை என்றாலும் கொரோனா மீட்பு பணியில் இருந்து வரும் கேரள மருத்துவதுறைக்கு இந்த பாக்டீரியா பரவல் சவாலாக இருந்து வருகிறது. 


கோழிக்கோட்டில் 11 வயது சிறுவனுக்கு இந்த ஷிகெல்லா பாக்டீரியா தொற்று முதலில் ஏற்பட்டு இருக்கிறது. பின் அந்த சிறுவன் இறந்துவிட, அவரது இறுதிசடங்கில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட எலும்மிச்சை ஜூஸ் மூலம் 50 பேருக்கு பரவி இருக்கிறது. 


ஜுரம், நாக்கு வறண்டு போதல் , இரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு போன்றவை தான் இந்த நோய்கான அறிகுறிகள். சுத்தமான உணவை மிதமான சூட்டில் சாப்பிடுவது , காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை அருந்துவது, வெளி இடங்கள் மற்றும் கழிவறைக்கு சென்று வந்தபின்பு சோப்பு போட்டு கை கழுவுதல் போன்றவையே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். மேலும் தமிழகத்துக்கு இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை என்றார்கள் மருத்துவர்கள்.