நாகர்கோவில் காசியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் அழைத்துச் சென்ற போது, நீதிமன்றத்தில் நின்ற பெண்களை நோக்கி காசி, கையால் ஹார்ட்டின் காண்பித்ததால், இந்த முறை அவர் கையில் கட்டப்பையைக் கொடுத்து போலீசார் தூக்கி வர செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னையில் பெண் டாக்டர் உள்பட பல பெண்களை ஏமாற்றி ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில், நாகர்கோவில் காசியை போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்பத்தில், மன்தமன் காசியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஏராளமான பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் மெம்மரி கார்ட், காசி பயன்படுத்தி வந்த செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பல பொருட்களை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். காசியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் வெளியானது.

இதனையடுத்து,  காசியின் நண்பன் டேசன் ஜினோவை போலீசார் கைது செய்து, அவனிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின்படி, காசியின் நெருங்கிய கூட்டாளியான தினேஷ் பற்றிய பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தது. இதனையடுத்து, அவனும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டான்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், “பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய காசி மீது சென்னையைச் சேர்ந்த மேலும் ஒரு கல்லூரி மாணவி கடந்த வாரம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். சிபிசிஐடி போலீசாரிடம் அளிக்கப்பட்ட இந்த புகாரின் அடிப்படையில், காசியின் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த தகவலின் படி, பெண்களை எப்படியெல்லாம் பயன்படுத்தி, ஆபாசப் படங்கள் எடுக்கப்பட்டது போன்ற உண்மைகள் தெரிய வந்தது. அதன்படி, காசி தான் அணிந்திருக்கும் கை கடிகாரத்தில் உள்ள கேமராவை பயன்படுத்தி, பல பெண்களை தனது காதல் வலையில் வீழ்த்தி, ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்தது தெரிய வந்தது.

குறிப்பாக, இந்த வழக்கில் காசியை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காசி அமரவைக்கப்பட்டு இருந்தான். அந்த நேரம் பார்த்து, அந்த நீதிமன்ற வளாகத்தகில் ஏராளமான பெண்கள் இருந்தனர்.

அப்போது காசியை சுற்றி ஏராளமான போலீசார் அங்கு நின்றனர். அந்த நேரம், போலீசார் இருக்கும் போதே போலீசார் முன்னிலையிலேயே நீதிமன்றத்தில் நின்ற சில பெண்களை நோக்கி காசி, தனது இரு கைகளாலும் ஹார்ட்டின் காண்பித்தார். இதனால், போலீசார் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக, காசியின் லேப்டாப் மற்றும் செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் 800 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாசப் புகைப்படங்களை சைபர் கிரைம் போலீசார் உதவி உடன், சிபிசிஐடி போலீசார் நேற்று முன் தினம் மீட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் 5 நாள் காவல் முடிந்து காசியை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். போன முறை நீதிமன்ற வாளகத்தில் நின்ற பெண்களுக்கு காசி ஹார்ட்டின் காண்பித்ததால், இந்த முறை அவர் கையில் ஒரு கட்டப்பையைக் கொடுத்து போலீசார் நடக்க வைத்தனர். இதனால், கடந்த முறை காசி ஹார்ட்டின் காண்பித்த புகைப்படமும், இந்த முறை அவர் கட்டப்பையுடன் நடக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கு, பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.