விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பவானி ரெட்டி.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி தொடரில் ஹீரோயினாக நடித்திருந்தார்.ப்ரஜின் இந்த தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார்.இந்த தொடர் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த தொடரில் இவரது நடிப்பினை கண்டு இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.இந்த தொடர் நிறைவடைந்த பின் சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி தொடரில் ஹீரோயினாக நடித்துவந்தார்.கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த சீரியலில் நடித்து வந்த இவர் சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார்.

இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் எப்போதும் கலந்துரையாடும் பவானி அவ்வப்போது போட்டோக்களையும்,வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்.சீரியல்களை தவிர சில படங்களிலும் பவானி நடித்துள்ளார்.தமிழை தவிர தெலுங்கிலும் சில  சூப்பர்ஹிட் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார் பவானி ரெட்டி.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரங்களை பெரும்பாலும் சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.அப்படி தான் பவானி ரெட்டியும் தனது பழைய போட்டோஷூட்களை பகிர்வது,தன்னுடைய வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார் பவானி ரெட்டி.இன்ஸ்டாகிராமில் 300K ரசிகர்களை சமீபத்தில் பெற்றிருந்தார்.சில மாதங்களுக்கு முன் ட்விட்டரிலும் இணைந்திருந்தார் பவானி.

இவரது பிறந்தநாள் கடந்த நவம்பர் 9ஆம் தேதி முடிந்தது.இவருக்கு ரசிகர்களும்,பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.இவருடன் சின்னத்தம்பி தொடரில் இணைந்து நடித்தவர் க்ரித்திகா இவரது நெருங்கிய நண்பர் என்பதால்,பவானி குறித்து பெரிய வாழ்த்து ஒன்று அத்துடன் சில புகைப்படங்களையும் இணைந்து பதிவிட்டார்.இந்த புகைப்படங்களில் இருவரும் லிப்லாக் செய்வது போல ஒரு புகைப்படம் இருக்க அதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் லெஸ்பியனா என்று கேள்வியெழுப்பினர்,இதற்கு விளமக்களித்த க்ரித்திகா நண்பர்கள் அப்படி முத்தம் கொடுத்துக்கொள்ள கூடாதா என்று தெளிவுபடுத்தினார்.

pavani reddy krithika annamalai liplock picture goes viral

A post shared by Krithika Annamalai (@krithika.annamalai)