புகழ் பெற்ற நடன கலைஞர் ஒருவர், மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, ஊர் கோயில்களில் திருவிழாக்கள் களைக்கட்டி உள்ளன.

அதன்படி, பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா, நேற்று மிகவும் விசேசமாக நடைபெற்றுது. 

இந்த விழாவில் “பரதம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம்” என்று, பலவிதமான ஆட்டம் பாட்டாம் கொண்டாட்டம் என்று, பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் விஷேசமாக நடத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், இந்த ஆண்டும் மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவில், தமிழகத்தின் புகழ் பெற்ற பரத நாட்டிய கலைஞர் காளிதாஸின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் “எல்லாம் வல்ல தாயே” என்று தொடங்கும் பாடலுக்கு, “சங்கமம் திரைப்படத்தில் வருவதைப் போன்றே, தான் பரதம் கற்றுக்கொடுத்த மாணவர்கள் மற்றும் மகளுடன் புகழ் பெற்ற பரத நாட்டிய கலைஞர் காளிதாஸின், நடனம் ஆடிக்கொண்டிருந்தார். 

அந்த நேரத்தில், குழந்தைகளோடு சேர்ந்து நல்ல முறையில் பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருந்த காளிதாஸின், திடீரென்று சினிமாவில் வருவதைப் போன்றே, தனது நெஞ்சை பிடித்து படி, அங்கிருந்த ஒரு நாற்காலியில் வந்து அமர்ந்து உள்ளார்.

முக்கியமாக, நெஞ்சை பிடித்து படி நாற்காலியில் அமர்ந்து நடன கலைஞர் காளிதாஸின், அந்த நாற்காலியில் அமர்ந்திந்த நிலையிலேயே அப்படியே அந்த கலைஞனின் உயிர், அந்த மேடையிலேயே பிரிந்து உள்ளது.

உயிரிழந்த பரத நாட்டியக் கலைஞர் காளிதாஸுக்கு தற்போது 54 வயது. 

பரத நாட்டிய கலைஞர் காளிதாஸின், தனது இளம் வயதில் இருந்தே பரத நாட்டியம் மீது அதிக ஆர்வம் கொண்ட காரணத்தால், “பரத நாட்டியாலய பள்ளி” ஒன்றை, நடத்தி வருகிறார்.

அத்துடன், தற்போது உயிரிழந்த காளிதாஸுக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

குறிப்பாக, “இவரது மனைவி கர்நாடக சங்கீத ஆசிரியை என்றும், இவர்கள் கலைக்காகவே வாழ்ந்த குடும்பத்தினர்” என்றும், அவரது உறவினர்கள் கூறி உள்ளனர்.

இதனிடையே, “புகழ் பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் நிகழ்ச்சியில் பரத நாட்டியம் ஆடிய போதே, நடன கலைஞர் ஒருவர் பொது மக்கள் முன்னிலையில் திடீரென்று உயிரிழந்த சம்பவம், கோயில் திருவிழாவை காண வந்த பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.