பிக் பாஸ் ரசிகர்களுக்கு விருந்தாக 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது தொடர்ந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு காரணமாக தற்காலிகமாக விலகுவதாகவும் விரைவில் பிக்பாஸ் சீசன் 6 சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து நடிகர் சிலம்பரசன்.T.R. தொகுத்து வழங்க பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட்டில் முதல் ஆளாக Evict ஆகி வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்து கலக்கினார். இருப்பினும்  தற்போது தனது உடல் நலம் காரணமாக மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி திடீரென பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறினார்.

மேலும் மற்றொரு வைல்ட் கார்ட் என்ட்ரியாக விஜய் டிவி பிரபலமும் பிரபல நடிகருமான சதீஷ் களமிறங்கினார். முன்னதாக நேற்று (மார்ச் 24ஆம் தேதி) பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் விஜய் டிவியின் முன்னணி நகைச்சுவை பிரபலமும் கைதி, மாஸ்டர் & ப.பாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகருமான தீனா பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் நுழைந்தார்.

இந்நிலையில் தீனாவை தொடர்ந்து முன்னணி நடன இயக்குனரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் ரன்னர் அப்-ஆக  வெற்றி பெற்றவருமான சாண்டி மாஸ்டர் தற்போது பிக் பாஸ் அல்டிமேட்டில் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டர் நுழைந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோ…