“நள்ளிரவில் சென்னை எப்படி இருக்கிறது?” என்பது குறித்து, இணை ஆணையர் ரம்யா பாரதி, சைக்கிளில் திடீரென நேற்று இரவு 9 கிலோ மீட்டர் தூரம் ரோந்து பணி மேற்கொண்டது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

“ஊர் காப்பான் காவலன்” என்ற பழமொழி நம்மூரில் எப்போதும் புழக்கத்தில் உள்ள ஒன்றுதான்!

இன்று வெளியான “RRR - ரத்தம் ரணம் ரௌத்திரம்” திரைப்படம் கூட “ஊர் காப்பான் காவலன்” என்ற பழமொழியை அடிப்படையாகக் கொண்டே வெளிவந்து வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படி, சினிமாவின் நிழலில் நடக்கும் காட்சிகள் கூட, சில நேரங்களில் நிஜத்தில் நடப்பதுண்டு. அந்த காட்சிகளுக்கு உண்மையானவர்களும், நேர்மையானவர்களுமே உருவம் கொடுப்பது, காலம் காலமாக அரங்கேறும் இயற்கையின் நியதியாகவே வெளியே தெரியாத அன்றாட சம்பவங்களாகவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால், மிகையாகாது.

அந்த வகையில், சென்னையில் நேற்று இரவு நேரத்தில், சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி IPS, திடீரென்று சைக்கிளிங் சென்று கிட்டதட்ட 9 கிலோ மீட்டர் தூரம் பயணப்பட்டு, சென்னை வடக்கு மண்டலத்தின் பாதி பகுதியை இரவோடு இரவாகப் பார்வையிட்டு, சென்னையின் நள்ளிரவு செயல்பாட்டைக் கண்காணித்து, அதிரடியாக அவர் ஆய்வும் செய்து அசத்தியிருக்கிறார்.

குறிப்பாக, சுமார் 2 மணி நேர சைக்கிளில் செய்த சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி IPS, சென்னையின் வடக்கு மண்டலத்தில் செயல்பட்டு வரும் சுமார் 8 காவல் நிலையங்களுக்கும் சைக்கிளிலேயே சென்று, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் இரவு நேர பாதுகாப்பு பணிகள் குறித்து, களத்தில் இறங்கி ஆய்வு செய்து அசத்தியிருக்கிறார் பெண் காவல் அதிகாரியான ரம்யா பாரதி.

அதன் படி, நள்ளிரவு 2.45 மணிக்கு, வாலாஜா சாலை முத்துசாமி பாலத்தில் இருந்து தனது சைக்கிளில் சென்று ஆய்வைத் தொடர்ந்த ரம்யா பாரதி IPS, அங்கிருந்து எஸ்பிளனேட் சாலை, மின்ட் தெரு, மூலக்கொத்தளம் பகுதி வழியாக வைத்தியநாதன் பாலத்தையும் கடந்து சென்று தண்டையார்பேட்டை காவல் நிலையம் வரை சைக்கிள் மார்க்கமாகச் சென்று அவர் அதிரடியான தனது ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, கோட்டை காவல் நிலையம், எஸ்பிளனேட் காவல் நிலையம், பூக்கடை காவல் நிலையம், யானைக்கவுனி காவல் நிலையம், வண்ணாரப்பேட்டை காவல் நிலையம், ஆர்.கே நகர் காவல் நிலையம், புதிய வண்ணாரப்பேட்டை காவல் நிலையம், தண்டையார்பேட்டை காவல் நிலையம் என மொத்தமாக 9 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் ரோந்து சென்று, வட சென்னையில் செயல்பட்டு வரும் மிக முக்கியமான 8 காவல் நிலையங்களுக்கு திடீர் திடீரென்று நேரடியாகவே சென்று, அங்கு “போலீசார் எப்படி செயல்பட்டு வருகிறார்கள்?” சக போலீசார் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?” என்று, நேரடியாகவே களத்தில் இறங்கி ஆய்வு செய்திருக்கிறார்.

Ramya Bharahi

மேலும், வட சென்னை பகுதிகளில் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்ட போது, “போலீசாரின் இரவு நேர ரோந்து வாகனங்கள் மற்றும் அந்த வாகனங்களில் செல்லும் போலீசார், பீட் அதிகாரிகள் எவ்வாறு கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்” என்பது குறித்து ஆய்வு செய்ததுடன், “இரவு நேரத்தில் விழிப்போடு போலீசார் எவ்வாறு தங்களது பணியை மேற்கொள்ள வேண்டும்?” என்பது குறித்தும், இணை ஆணையர் ரம்யா பாரதி சக போலீசாருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதுடன், சில ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார்.

முக்கியமாக, நள்ளிரவில் தனியாகச் சைக்கிளில் சென்றபோது, எதிரே தென்பட்ட பொது மக்கள் பலரிடமும் குறைகள் மற்றும் அவரது கருத்துகளையும் பெண் ஐபிஎஸ் அதிகாரியான ரம்யா பாரதி, கேட்டறிந்தார்.

இப்படியாக, பெண் ஐபிஎஸ் அதிகாரி ரம்யா பாரதி, நள்ளிரவு நேரத்தில் திடீரென்று வட சென்னை பகுதியில் ஆய்வு மேற்கொண்டது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வரும் நிலையில், இணை ஆணையர் ரம்யா பாரதியின் இந்த துணிச்சலான மற்றும் பொறுப்பான செயலுக்கு சக காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, “சென்னையில் குற்றச் செயல்களை தடுக்க போலீஸார், இரவு நேர சைக்கிளில் ரோந்து பணியானது, தேவையான ஒன்றுதான்!”