கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் வன்னியர் சமூதாயத்துக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் எதற்காக இந்த போராட்டம் நடந்தினார் ராமதாஸ் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் நிருபர்களின் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கூறியது, ” மத்திய அரசின் இடஒதுக்கீடுக்காளுக்காக எல்லாம் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி இருக்கலாமே.. ஏன் நடத்த வில்லை? தன் மகன் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்த போது மருத்துவ துறையில் செய்த பல ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதனால் தான் மத்திய அரசின் இடஒதுக்கீட்டை கவனமாக மறந்துவிட்டனர். 


இது தேர்தல் சமயம். இங்கு  இருக்கும் எடப்பாடி அரசை மிரட்டி வரும் சட்டமன்ற தேர்தலில் சீட்டை அதிகமாக கேட்கும் உத்தியாகவே தான் இந்த போராட்டத்தை நடத்தினார். இதில் வன்னியர்களின் வளர்ச்சியின் மீது உண்மையான அக்கறை எல்லாம் இல்லை. தன் குடும்ப வளர்ச்சிகாக மட்டுமே இந்த போராட்டம். 


வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு 15 சதவீதத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.இவர் 20% என்று கேட்கிறார். ஆனால் நீதிமன்ற உத்தரவுபடி 15 சதவீத தனி இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு கிடைத்தாலே வன்னியர்களின் வளர்ச்சிக்கு பெரிய கைக்கொடுக்கும்.


கலைஞர் ஆட்சியில் தமிழகத்தில் உள்ள வன்னியர் சொத்துக்களை எல்லாம் ஒருங்கிணைத்து வன்னியர் நல வாரியம் என்று  உருவாக்கப்பட்டு, தற்போது அதிமுக ஆட்சியில் அதன் நீட்சியாக பல்வேறு வன்னியர் சொத்துக்களை இனங்கண்டு அதை வன்னியர் நல வாரியத்தின் கீழ் கொண்டு வர சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டட்து. இதற்கு மத்திய அரசும், ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தனர். வன்னியர் கல்வி அறக்கட்டளை கோனேரி குப்பத்தில் இயங்கும்  கலை அறிவியல் கல்லூரி, சட்டக்கல்லூரி, பொறியியல் கல்லூரி ஆகியவையும் இந்த அறக்கட்டளைகளுடன் இணைக்கப்பட்டது. இவை எல்லாம் ராமதாஸ் வன்னியர்களிடம் இருந்து வசூல் செய்து உருவாக்கியது.  

இதை தன் குடும்பம் மட்டும் அனுபவிக்க ராமதாஸ் தனது பெயருக்கு மாற்றி ஊழல்கள் செய்தார். இதை தடுக்க பல்வேறு வன்னியர் சங்க அமைப்புகள் முயற்சியினால்  அவை வன்னியர் சொத்து வாரியத்தின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. 
இதனால் நாளை இந்த பொது சொத்துகளை தன் குடும்பம் மட்டும் அனுபவிக்க முடியாமல் சென்றுவிடும் என்பதற்காக வன்னியர் மக்களின் வளர்ச்சிக்காக என்று போராட்ட நடத்தி எடப்பாடி அரசை மிரட்டுகிறது. 


வன்னிய இளைஞர்களுக்கு இவர்களின் தில்லுமுல்லு யுக்தி புரியவதில்லை. அந்த இளைஞர்களை சிந்திக்க விடாமல்  மூளை சலவை செய்து ஆர்பாட்டம் செய்ய வைக்கின்றனர். 

மேலும் இவர்களுக்கு உண்மையில் வன்னியர்களின் மீது சிறிய அளவில் அக்கறை இருந்திருந்தா கூட மு.க.ஸ்டாலின்  விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது இதை அறிவித்த போதே அதை ஏற்றுக்கொண்டு இருந்திருக்கலாமே? அப்போது ஏன் அதை வரவேற்க இல்லை? அப்போது செய்து இருந்தால் ராமதாஸ்க்கு அரசியல் செய்ய வேற வழி இல்லை என்பதை தெரிந்து கொண்டு ராமதாஸ் தற்போது இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.
இவர்களின் அரசியல் புரியாத வன்னிய இளைஞர்களை தனது ஓட்டு வங்கியாகவே பார்க்கின்றவர்களை நம்பி அவர்களுக்கும் ஆர்பாட்டத்தில் ஈடுபடுவடுவது வருத்தமளிக்கிறது,’’ என்றார்.