நன்னடத்தை காரணமாக தனக்கு ஜெயில் தண்டனை நாட்களில் இருந்து ரெமிஷன் வழங்கி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி பெங்களூரு சிறைத் துறைக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.  

 பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் , சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் சிறையில் இருந்து வருகிறார் சசிகலா. அவரை விரைவில் விடுதலை செய்ய மன்னார்குடி தரப்பில் பல முயற்சிகள் எடுத்துவந்தனர். 


இதையொட்டி அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான 10.10 கோடி ரூபாய் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நன்னடத்தை தண்டனை குறைப்பு காரணமாக சசிகலா எந்நேரமும் விடுதலையாகலாம் எனவும் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.


 ஆனால், கர்நாடக மாநில உள் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, நன்னடத்தை விதிகள் அவருக்கு பொருந்தாது என தெரிவித்தது சசிகலாவின் விடுதலையில் சில சிக்கல்கள் இருப்பதை உறுதிப்படுத்தியது. ஆனால் மறுபக்கம்  சசிகலா ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என சிறைத் துறை நிர்வாகமும் கடந்த மாதம் தெரிவித்து இருந்தது. 


நன்னடைத்தை காரணமாக குற்றவாளிகளுக்கு மாதத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்படும். இதை பயன்படுத்திக்கொள்ள சசிகலா தரப்பு நினைக்கிறது. நன்னடத்தை காரணமாக தனக்கு ஜெயில் தண்டனை நாட்களில் இருந்து ரெமிஷன் வழங்கி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி பெங்களூரு சிறைத் துறைக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.  


இந்த மனுவை சிறை அதிகாரிகள் சிறைத் துறை அனுப்பியுள்ளனர். ஆனால் மனுவை நிராகரிக்க சிறை துறை அதிகாரிகளுக்கு உரிமை இருக்கிறது. மனுவை ஏற்றுக்கொள்வது முற்றிலும் சிறை அதிகாரிகளின் விருப்பம் சம்பந்தப்பட்டது. எனினும் முந்தைய தீர்வை மறுபரிசீலனை செய்ய சசிகலா தனது மனுவில் கேட்டு உள்ளார்.

மனு இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது என சிறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.  ஒருவேளை சசிகலாவின் மனு நிராகரிக்கப்பட்டால் சசிகலாவின் அவரது தண்டனை காலம் நிறைவு பெற்று ஜனவரி 27ஆம் தேதிதான் விடுதலை செய்யப்படுவார்.