பட்டினி குறியீட்டில் இந்தியா 101 வது இடம்!

பட்டினி குறியீட்டில் இந்தியா 101 வது இடம்! - Daily news

உலகளாவிய பட்டினி குறியீட்டில் மொத்தம் உள்ள 116 நாடுகளில் வங்கதேசம், நேபாளத்தை விடவும் மோசமாக இந்தியா 101 வது இடத்திற்கு சென்று உள்ளது.

உலக நாடுகள் பற்றிய விநோத தகவல்கள் மற்றும் ஆச்சரியம் அளிக்கும் வகையிலான பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி, பலருக்கும் ஆச்சரியம் அளிப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த சூழலில் தான், அயர்லாந்தின் தொண்டு நிறுவனமான கன்சர்ன் வேர்ல்ட்வைட் மற்றும் ஜெர்மனியின் ஹங்கர் ஹில்ப் ஆகிய நிறுவனங்கள் இணைந்து சர்வதேச
நாடுகளின் பட்டினிக் குறியீடு குறித்த பட்டியலை தற்போது வெளியிட்டு உள்ளது.
 இந்த பட்டியல், ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் உயரத்திற்கு தகுந்த எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு தகுந்த உயரம் இல்லாமல் இருத்தல் மற்றும்
குழந்தைகள் இறப்பு விகிதம் ஆகியவற்றை கொண்டு கணக்கிடப்பட்டு வருகிறது.

இதில், மொத்தம் உள்ள 116 நாடுகளில், கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியா 94 வது இடத்தை பெற்று இருந்தது. தற்போது, 7 இடங்கள் பின் தங்கி 101 வது இடத்துக்கு
இந்தியா சென்று இருக்கிறது.

மேலும், கடந்த 2000 ஆம் ஆண்டில் இந்தியாவின் பட்டினி குறியீடு புள்ளிகள் 38.8 ஆக இருந்த போது, தற்போது 27.5 ஆக அவை சரிந்து உள்ளது. 

முக்கியமாக, உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது, தற்போது 17.3 சதவீதமாக குறைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், இது
உலகிலேயே மிகவுமு் குறைவான சதவீதம் ஆகும்.

குறிப்பாக, இந்த பட்டியலில் இந்தியாவுக்கு பிறகு பெரும்பாலும் ஆப்ரிக்காவை சேர்ந்த பஞ்சத்தில் அடிபட்ட நாடுகளே அதிகம் உள்ளன. 

பெரும் வளர்ச்சி காணாத நமது அண்டை நாடுகள் இந்தியாவை விட முன்னேறிய நிலையில் இருந்தாலும், பாகிஸ்தான் 92 வது இடத்தில் உள்ளன.
மேலும், மியான்மர் 71 வது இடத்தையும், நேபாளம் மற்றும் வங்க தேசம் 76 வது இடத்தையும் பகிர்ந்து கொண்டு இருக்கின்றன. இதில், சீனா மற்றும் குவைத் போன்ற
நாடுகள் முன்னணி இடங்களில் இருக்கின்றன.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், தனது டிவிட்டர் பக்கத்தில் “வறுமை, பட்டினி, இந்தியாவை சர்வதேச வல்லரசாக்குதல், நமது டிஜிட்டல்
பொருளாதாரம் என பலவற்றையும் ஒழித்து விட்டீர்கள்” என்று, வேதனையுடன் குறிபிட்டு உள்ளனர்.

இதனை குறிப்பிட்டு, “வாழ்த்துக்கள் பிரதமர் மோடி ஜி!”’ என்றும், அவர் பதிவிட்டு உள்ளார். 

அதே போல், “நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் விவகாரம் மூலமாக, லக்கிம்பூர் வன்முறையை திசை திருப்ப முயற்சிக்கப்படுவதாகவும்”
கபில் சிபல் குற்றம்சாட்டி உள்ளார்.

Leave a Comment