தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

income tax raid

தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணனின் சென்னை சோலையூர் மற்றும் அண்ணா சாலையில் உள்ள வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு தொடர்பான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியார் ஒருவரிடம் ஆலோசித்து பங்குச்சந்தை தொடர்பான முடிவுகளை எடுத்ததாக சித்ரா மீது புகார் எழுந்தது. ஆனந்த் சுப்பிரமணியத்தை விதிகளை மீறி தலைமை செயல்பாட்டு அதிகாரியாக நியத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா சுமார் 20 வருடங்களாக முகம் தெரியாத ஒரு இமயமலை சாமியார் ஒருவருக்கு ஈமெயில் மூலம் பல்வேறு முக்கியமான தரவுகளைப் பகிர்ந்து, அவர் கூறும் முடிவுகளை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நிறைவேற்றி வந்துள்ளது செபி அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சித்ரா ராமகிருஷ்ணன் மீதான புகார்கள் குறித்து பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விசாரித்து வருகிறது. முறைகேடுகளின் பின்னணி என்ன? கோல் லொகேஷன் ஊழலுக்கு பின்னணியில் இருந்தது யார்? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.