தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் வலிமை. கடைசியாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து மீண்டும் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் அஜித்குமார் நடித்துள்ளார்.

அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவரவிருக்கும் வலிமை திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். காவல்துறை அதிகாரியாக அஜித் குமார் கதாநாயகனாக நடிக்க, ஹூமா குரேஷி, சுமித்ரா, யோகிபாபு, விஜய் டிவி புகழ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திக் வில்லனாக நடித்துள்ளார்.

நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள வலிமை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முன்னதாக கடந்த பொங்கல் வெளியீடாக ரிலீசாக இருந்த வலிமை திரைப்படம் கொரோனா எஹவைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

தமிழகத்தில் வலிமை திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளாக அதிகாலை முதல் காட்சிகள் அதிகாலை 4 மணி முதல் ரசிகர்களுக்காக திரையிடப்படவுள்ளது. இந்நிலையில் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள நாங்க வேற மாறி பாடலின் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. கலக்கலான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…