இயக்குனராக தனது முதல் படமான சதுரங்கவேட்டை திரைப்படத்திலேயே பலரது கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அடுத்து வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் வர்த்தக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 3-வது திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான அஜித் குமாரை இயக்கினார் H.வினோத்.

பின்க் படத்தின் தமிழ் ரீமேக்காக H.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2-வது முறையாக இணைந்த அஜித்-H.வினோத் கூட்டணியில் உருவானது வலிமை திரைப்படம். தயாரிப்பாளர் போனி கபூரின் பே பியூ பிராஜக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் வலிமை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள வலிமை திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித் குமார் கதாநாயகனாக நடிக்க, ஹூமா குரேஷி, சுமித்ரா, யோகிபாபு, விஜய் டிவி புகழ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திக் வில்லனாக நடித்துள்ளார்.

நீரவ்ஷா ஒளிப்பதிவில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான வலிமை படத்திற்கு திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் அதிரடியான புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த ப்ரோமோ இதோ…