தென்னிந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்கள். புரட்சித்தலைவர் எம் ஜி ஆர்-க்கு பிறகு இரட்டை வேடங்களில் நடித்து அதிக வெற்றி படங்களை கொடுத்த சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

முன்னதாக சரத்குமார் நடிப்பில் தெலுங்கில் சமீபத்தில் வெளிவந்த பரம்பரா வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தமிழில் கடைசியாக வானம் கொட்டட்டும் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சரத்குமார், மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் விரைவில் கன்னடத்தில் வெளிவரவிருக்கும் ஜேம்ஸ் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்த வரிசையில் இந்திய சினிமாவை மிகப் பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சரத்குமார் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள வெப்சீரிஸ் இரை.

உலகநாயகன் கமல்ஹாசனின் உதவி இயக்குனரும் தூங்காவனம் & கடாரம்கொண்டான் படங்களின் இயக்குனருமான ராஜேஷ்.M.செல்வா இயக்கத்தில்  சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இரை வெப் சீரிஸை ராதிகா சரத்குமாரின் ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நேரடியாக aha Tamil OTT தளத்தில் வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி ரிலீஸாகும் இரை வெப் சீரிஸில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருடன் இணைந்து நிழல்கள் ரவி, அபிஷேக் ஷங்கர், ஸ்ரீகிருஷ்ணா தயால், கௌரி நாயர், ஸ்ரீரஞ்சனி பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். S.யுவா ஒளிப்பதிவில் இரை வெப் சீரிஸுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இரை வெப் சீரிஸின் ட்ரைலர் தற்போது வெளியானது. விறுவிறுப்பான அந்த ட்ரைலர் இதோ…