குடிமைப்பணி முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அரசு பயிற்சி மையத்தில் முதன்மை தேர்வுக்கு பயிற்சி பெற  இணையவழியில்  விண்ணப்பிக்கலாம் என்று தலைமை செயலர் இறையன்பு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தலைமை செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விபரம் :

சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலையில் அகில இந்திய குடிமை பணிகள் தேர்வு பயிற்சி மையம் கடந்த 56 ஆண்டுகலாக  செயல்பட்டு வருகிறது. இந்த மையம் தமிழக இளைஞர்களுக்கு , குறிப்பாக கிராம பகுதியிலுள்ள ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.

ias

இந்த பயிற்சி மையத்தில் பசுமை சூழலுடன் வகுப்பறைகள், தங்கும் இட  வசதி, தரமான உணவு வழங்கும் விடுதி, சிறந்த நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.மாணவர்களுக்கு இங்கு கட்டணமின்றி உணவு அருந்தும் ஏற்பாடும்  செய்யப்பட்டுள்ளது.

சிறந்த பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி அளிப்பதுடன்,மாணவர்கள் தங்களை முதன்மை தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளும் வகையில் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இதுதவிர,முதனமை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தமிழக மாணவர்கள் எங்கு பயிற்சி பெற்று முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றுயிருந்தாலும் , இந்த பயிற்சி மையத்தில் முதன்மை தேர்வுக்கு பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள்.இந்த மையத்தில் இந்த ஆண்டு 225 பேர் தங்கி பயில வசதிகள் உள்ளன.
  
இதில் சேர விரும்பும் தேர்வர்கள் நவ.7-ம் தேதி மாலை 6 மணி வரை www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

பதிவு செய்பவர்கள் விண்ணப்பத்தில் கூறியுள்ளபடி, வருமானச் சான்றிதல் கேட்டு விண்ணப்பித்ததற்கான இணைய ரசீதை இணைக்கவேண்டும்.வருமானம் தொடர்பாக உரிய அலுவலர்கள் அளித்த சான்றிதழை பயிற்சி மையத்தில் சேரும் போது ஒப்படைக்கவேண்டும். பொருளாதார ரீதியா பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட பட்டியலின தேர்வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் நவ.9-ம் தேதி மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படும். 10-ம் தேதி சேர்க்கை நடைபெறும். 11-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் இவ்வாறு தமிழக தலைமை செயலாளர் இறையன்பு  அறிவித்துள்ளார்.