தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு தேசிய விருது வாங்கிகொடுத்தது.இதனை தொடர்ந்து இவர் நடித்த சில படங்கள் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தன.

நேற்று தீபாவளிக்கு வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.இதனை தொடர்ந்து சில முன்னணி படங்களில் நடித்துள்ளார் கீர்த்தி.அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகியுள்ள சாணி காயிதம் திரைப்படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார்,இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் செல்வா.இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்கவுள்ளார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.முன்னதாக இந்த படத்திற்கு யுவன் இசையமைக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.