சமீபத்தில் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் 


கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனீத்  ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கன்னட திரையுலகின் பிதாமகனாக கருதப்படும் ராஜ்குமாரின் இளைய மகன் புனீத் ராஜ்குமார் 2002-ல்நடிக்கத் தொடங்கினார்.

surya

குறுகிய காலத்தில் கன்னட மக்களின் மனங்களை கொள்ளை கொண்ட இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்திய திரைப் பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர் இறந்த போதுநேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் தற்போது அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

சில தினங்கள் முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் கர்நாடகா சென்று புனீத் ராஜ்குமாரின் நினைவிடத்தில்அஞ்சலி செலுத்தினார். பிறகு நடிகர் விஜய் சேதுபதி சென்று அஞ்சலி செலுத்தினார்.அப்போது பேசிய விஜய்சேதுபதி , புனீத்ராஜ்குமாரை ஒருமுறைகூட நேரில்சந்தித்ததில்லை, அவர் இவ்வளவு நல்ல விஷயங்கள் செய்திருக்கிறார் என்பது அவர்  இறந்த பிறகே தெரியும் என்று கூறினார்.

இன்று நடிகர் சூர்யா, புனீத்  ராஜ்குமாரின் நினைவிடத்தில் மாலையிட்டு தனது அஞ்சலியை செலுத்தினார். அப்போது அவர் உணர்ச்சிமிகுதியில் கண்கலங்கினார். நடிகர் புனீத்  ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூர்யா, புனீத் மரணம் என்பது நடந்திருக்கக்கூடாத ஒன்று. அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது என் குடும்பமும் அவரது குடும்பமும் ஆரம்பகாலத்திலிந்து நெருக்கமானது. நான் என் தாயின் வயிற்றில் 4 மாத கருவாக இருந்தபோது அவரும் அவரது தாயார் வயிற்றில் 7 மாத கருவாக இருந்ததாக எனது தாய் கூறியிருக்கிறார். எப்போதும்  சிரித்த முகத்துடனே இருக்கும் அவர் தற்போது  மறைந்தாலும் ரசிகர்களின் இதயத்தில் சிரித்துக்கொண்டே இருக்கட்டும். ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அவர் மரணமடையவில்லை நம்முடனே வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு மனவலிமையை கொடுக்க வேண்டுகிறேன் என தெரிவித்தார்.