5 ஆண்டு கால உறவில் இருந்த கள்ளக் காதலியை, கள்ளக் காதலன் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்து உள்ள பாப்பாத்திகாட்டு புதூரைச் சேர்ந்த விஸ்வநாதனுக்கும், அதே பகுதியில் தனியாக வசித்து வந்த ராஜி என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்  காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். 

இப்படியாக இவர்களது கள்ளக் காதல் உறவு சுமார் 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்தது.

கள்ளக் காதலர்கள் இருவரும் கூலித் தொழிலாளிகள் என்பதால், தேங்காய் பறிப்பதற்காகக் கர்நாடகா மாநிலம் ராமாபுரத்திற்கு வேலைக்குச் சென்று விட்டு, அந்த பகுதியில் உள்ள வனப்பகுதி வழியாக அவர்கள் இருவரும் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்களுக்கு இடையே பணத் தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால், கள்ளக் காதல் ஜோடி இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாய் தகராறு ஒரு கட்டத்தில் எல்லை மீறிப் போகவே, கடும் ஆத்திரமடைந்த விஸ்வநாதன், கள்ளக் காதலியை கடுமையாகத் தாக்கி உள்ளார். இதில், மயங்கி விழுந்த அந்த பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, கள்ளக் காதலன் விஸ்வநாதனை கைது செய்தனர். இதனையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த 5 ஆண்டுக் கால கள்ளக் காதல் கதைகள் முதல் கட்ட விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. 

இது குறித்து போலீசார் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், திருப்பூர் அருகே 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த மீனாட்சி நகரில் வசித்து வந்தார் பாலமுருகன். இவருக்கு, கடந்த சில வருடங்களுக்கு முன்பு கவிதா என்ற இளம் பெண்ணுடன் திருமணம் ஆகி உள்ளது. திருமணத்திற்குப் பிறகு தனது மனைவியுடன் பாலமுருகன் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்துள்ளார். 

இந்நிலையில், பாலமுருகன் மனைவி கவிதா, 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில், 8 மாத கர்ப்பிணியான கவிதா, தன் கணவருடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், தற்கொலை செய்துகொள்ளுவதற்கு முன்பாக, அந்த தம்பதியினர், “தங்கள் மரணத்திற்கு யாரும் காரணமில்லை” என கைப்பட எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம் ஒன்றும் போலீசாருக்கு கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன. எனினும், அந்த தம்பதியினரின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.