தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

சென்னையில் ஒரு சில இடங்களில் வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குமரிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யும் ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

அதனைத்தொடர்ந்து 15.12.2021, 16.12.2021-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் உணவு தெரிவித்துள்ளது.

மேலும் 17.12.2021 தேதி தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.