பல கோடி தமிழ் ரசிகர்களின் இதயத்தில் நகைச்சுவை மன்னனாக சிம்மாசனமிட்டு அமர்ந்து இருக்கும் வைகை புயல் வடிவேலு அவர்கள் நடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை சமீபத்தில் நீக்கப்பட்டதை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது 2-வது இன்னிங்சை தற்போது வெற்றிகரமாக தொடங்கியுள்ளார்.

முன்னதாக LYCA புரோடக்சன் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.C நடித்த தலைநகரம் படத்தில் ரசகர்களின் ஃபேவரட்டான வடிவேலுவின்  நாய் சேகர் கதாபாத்திரத்தை பெயராக கொண்ட நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் தயாராக உள்ளதாக சுராஜ் அறிவித்தார். நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு வெளியானதை தொடர்ந்து, அசத்தலான மோஷன் போஸ்டரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

நாய் சேகர் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி சிவாங்கி, நடிகர் ஆனந்தராஜ் மற்றும் VJ விக்னேஷ் காந்த் ஆகியோர் வடிவேலுவுடன் இணைந்து நடிக்கின்றனர்.நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் படக்குழுவினர் மற்றும் நடிகர் நடிகைகள் கலந்து கொண்ட படபூஜை புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் இதோ…