கோவையில் ஆபாசப் படத்தை வைத்து கள்ளக் காதலியை மிரட்டி உல்லாசத்திற்கு அழைத்த கள்ளக் காதலனை, போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த 40 வயதான சந்திரன், தினசரி வேலைக்கு சென்று வந்தார். 

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான 32 வயது பெண், சந்திரனுக்கு அறிமுகம் ஆகி உள்ளார். இந்த பழக்கம், நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இந்த திருமணப் பந்தத்தைத் தாண்டிய உறவால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, அப்படி அவர்கள் தனிமையில் உல்லாச இன்பத்தில் இருந்த போது, தனது கள்ளக் காதலியை ஆபாசமாக தன்னுடைய செல்போனில் கள்ளக் காதலன் சந்திரன் விளையாட்டுத் தனமாகப் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து வைத்துக்கொண்டதாகத் தெரிகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த கள்ளக் காதல் விவகாரமானது, அந்த பெண்ணின் வீட்டிற்குத் தெரிய வந்தது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர், அந்த பெண்ணை தனியாக அழைத்து அறிவுரை கூறி உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, அவர்கள் குடும்பத்துடன் அந்த வீட்டை காலி செய்து, அங்குள்ள சந்திரன் மலுமிச்சம்பட்டிக்கு குடி பெயர்ந்தனர். இதனையடுத்து, தனது கள்ளக் காதலனை பார்க்காமல், பேசாமல், பழகாமல் அந்த பெண் தனது குடும்பத்துடன் இருந்து வந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த கள்ளக் காதலன் சந்திரன், அந்தப் பெண்ணை மீண்டும் உல்லாச இன்பத்திற்கு அழைத்து உள்ளார் என்றும், கூறப்படுகிறது. ஆனால், இதற்கு அந்தப் பெண் மறுத்து உள்ளார். அத்துடன், “எனக்கு என் குடும்பம் தான் முக்கியம் என்றும், இனி இது போன் தவறான உறவுகள் வேண்டாம் என்றும், நாம் இப்படியே விலகிக்கொள்ளலாம்” என்றும், அந்த பெண் கூறி உள்ளார்.

இதனைக் கேட்டு கடும் ஆத்திரமடைந்த சந்திரன், அந்தப் பெண்ணை ஆபாசமாக ஏற்கனவே எடுத்து வைத்திருந்த புகைப்படத்தைக் குறிப்பிட்டு, “இதனை உனது குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவேன் என்றும், சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவேன்” என்றும், அவர் மிரட்டி உள்ளார்.

இதனால், பயந்து போன அந்த பெண், அங்குள்ள குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சந்திரனை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. 

அதன் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை, ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்டம் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவு படி, போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.