பதவி காலத்தில் சிறப்பாக செயல்பட்டதாகவும், திருப்தியுடன் செல்வதாகவும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே கூறியுள்ளார்.


கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக, சரத் அரவிந்த் பாப்டே பதவியேற்றார். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரை பூர்வீகமாகக் கொண்ட பாப்டே பல்வேறு நீதிமன்றங்களில் 21 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.


இன்று ஓய்வுபெற்ற நிலையில், பிரிவு உபசார விழாவில் பேசிய பாப்டே,‘’ கொரோனா காலத்தில் காணொலி வாயிலாக விசாரணை நடைபெற்றாலும் அதில் உள்ள பிரச்னைகள் களையப்பட வேண்டும். என்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டதாகவும், திருப்தியுடன் செல்கிறேன்.  . 
பாப்டே அடுத்து உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா, நாளை பதவியேற்கிறார்.