ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில்  அதிகரித்து வரும் நிலையில் , ஆக்சிஜன் பற்றாகுறை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தில் அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மூடப்பட்ட தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிப்பது தொடர்பாக நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில்  நடைப்பெற்றது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக காலை 11 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்ய வேண்டியது உள்ளதால் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. 


இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆதராவளர்கள், எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்ட நிலையில் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் முடிவாக ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று பெரும்பாலானவர்கள்தெரிவித்துள்ள நிலையில் கூட்டம் நிறைவடைந்தது.