தமிழ்நாடு முட்டாள்களின் உலகமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நடைபெற்ற மலிவு விலை மக்கள் மருந்தகம் திறப்பு விழாவில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டு மருந்தகத்தை திறந்துவைத்தார்.  அப்போது பேசிய அவர், ‘’ தமிழ் தமிழ் என தமிழை அழித்த கும்பல் இன்று தமிழைப்பற்றி பேசிக்கொண்டு இருக்கிறது.

நடிப்பில் மட்டுமே கமல் விஷயம் பெரியதாய் தெரியும் மற்றபடி கண்டெய்னர் மொபைல் டாய்லைட் என எதைக் கண்டாலும் பயப்படுகிறார், இவர் உலக நாயகனா? ஸ்டாலின் முட்டாள் என தெரியும் அதைப் போல பெரியாரை பின்பற்றுவதாக கூறும் கமலும் முட்டாள்தான். இன்றைக்கு முட்டாள்கள் உலகமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளது.


ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் தயாரிக்கலாமா, திறக்கலாமா என்பதை கோர்ட் முடிவெடுக்கட்டும். ஆனால் ஆயிரம் டன் ஆக்ஸிஜன் கொள்ளளவு உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை தற்போது அத்தியாவசிய தேவை இருக்கும் போது அதை திறக்க எந்த ஆட்சபனையும் செய்ய வேண்டாம். “ என்றார்