எல்லை பிரச்சனை மற்றும் சீனாவின் மொபைல் செயலிகள் பலவற்றை இந்தியா தடை செய்ததையடுத்து இந்தியா சீனா இடையேயான உறவில் சுமூக போக்கு இல்லாத சூழலில் இந்தியாவுக்கு உதவ சீனா தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.  


இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலை வேகமெடுத்து இருக்கும் நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதி தட்டுப்பாடு என்று நாடே திணறி வருகிறது. இந்நிலையில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உதவ சீனா முன்வந்துள்ளது. 


சீனாவின் அயலுறவு அமைச்சகம் கூறியிருப்பது, ‘’ மனித குலத்துக்கே கேடு விளைக்கும் இந்த கொரோனா வைரஸ் அழிப்பதில் ஒவ்வொரு நாடும் உதவிக்கொள்வது தான் உலகத்தை காப்பாற்ற தீர்வு. இந்தியாவின் மோசமான சூழலை கருத்தில் கொள்கிறோம். மருத்துவ உபகரணங்கள், சப்ளைகள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு தேவையான உதவியை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.