பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். அதையடுத்து முத்தையா இயக்கத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்த மருது திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளராக இருந்த ஆர்.கே.சுரேஷ் தற்போது வில்லன், கதாநாயகனாக நடித்து வருகிறார். 

சிறந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் தன்னை தயார் செய்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். 

ஆர்.கே. சுரேஷுக்கும், சென்னையைச் சேர்ந்த சினிமா ஃபைனான்சியர் மது என்பவருக்கும் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. லாக்டவுனுக்கு பிறகு நடந்த இந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். 

இந்நிலையில் தேவதையை வரவேற்றுள்ளார் ஆர்.கே.சுரேஷ். தனக்கு பெண் குழந்தை பிறந்த செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர் வெளியிட்ட பதிவில், எங்கள் குடும்பத்தின் புது வரவு...தாயும் சேயும் நலமாக உள்ளார்கள் என்று பதிவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். 

தந்தையான ஆர்.கே.சுரேஷுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா.

பாலா தயாரிப்பில் ஆர்.கே சுரேஷ் நடித்துள்ள புதிய படமான விசித்திரன் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. ஜோசப் என்ற மலையாள படத்தில் ரீமேக் தான் இந்த படம். ஜோசப் படத்தில் ஜோஜு ஜார்ஜ் ஹீரோவாக நடித்திருந்தார். க்ரைம் திரில்லரான இப்படத்திற்கு அங்கு நல்ல வரவேற்பு அந்த படம் பெற்ற நிலையில் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. விசித்திரன் படத்தினை இயக்குனர் எம். பத்மகுமார் இயக்கியுள்ளார். விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.