சென்னையில் மாடலிங் மன்மதன் ஒருவன், கிட்டதட்ட 20 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை மோசடியாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புரசைவாக்கம் மில்லர் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் 26 வயதான முகமது சையது என்பவர், மாடலிங் துறையில் வளர்ந்து வரும் கலைஞனாக இருந்து வந்தார்.

அத்துடன், சென்னையிலேயே அவர் “நம்ம சென்னை” என்ற பெயரில், ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வந்திருக்கிறார்.

அதே நேரத்தில், ஜிம்முக்கு சென்று தனது உடலை 6 பேக் கொண்டு, மெருகேற்றியும் அவர் மிடுக்கான உடல் கட்டுடன், போட்டோக்களை எடுத்து, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியாவில் சேர் செய்து வந்திருக்கிறார்.

இதனால், சோசியல் மீடியாவில் பல பெண்களும், இவரிடம் பேச அதிகம் ஆர்வம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான், “நம்ம சென்னை” என்ற பெயரில், ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்திய போது, ஒரு 3 இளம் பெண்கள் இவருக்கு பழக்கம் ஆகி உள்ளனர்.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு, அந்த 3 இளம் பெண்களிடமும் தொடர்ந்து பேசி வந்த இந்த மாடலிங் மன்மதன், அவர்களை தனது காதல் வலையில் ஒரே நேரத்தில் வீழ்த்தி இருக்கிறார். 

இதனால், அவர்கள் 3 பேரையும் நம்ம வைத்து, அவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படியாக, 3 இளம் பெண்களையும் அவர் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து வந்த நிலையில், அந்த 3 இளம் பெண்களில் ஒருவர், எதார்த்தமாக இந்த மாடலிங் மன்மதனின் செல்போனை பார்த்திருக்கிறார்.

அப்போது, தன்னிடம் சாட்டிங் செய்வது போலவே மற்ற பெண்களிடமும் சாட்டிங் செய்ததை அவர் கண்டுப்பிடித்திருக்கிறார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், அந்த போனில் உள்ள மற்ற இளம் பெண்களின் சொல்போன் நம்பரை நோட் பண்ணிக்கொண்ட அந்த பெண், அவரகளை தனியாக தொடர்புகொண்டு தான் ஏமார்ந்த விசயத்தையும், அந்த மாடலிங் மன்மதனின் மன்மத லீலைகள் பற்றியும் கூறி, உண்மையை புரிய வைத்திருக்கிறார்.

இதனால், அந்த இரு இளம் பெண்களும் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதனையடுத்து, இந்த 3 பெண்களும் சேர்ந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் அந்த மாடலிங் மன்மதன் மீது பாலியல் புகார் அளித்து உள்ளனர்.

இது தொடர்பாக சென்னை கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து புகார் அளித்த அந்த 3 மாடல் அழகிகளும், “நாங்கள் மாடலிங் துறையில் இருப்பதால், எங்களுடன் விளம்பரப் படங்களில் நடித்த மாடலிங் நடிகர் முகமது சையது, எங்களை காதலிப்பதாக சொல்லி திருமண ஆசை காட்டி எங்களுடன் பாலியல் ரீதியான உறவு வைத்துக் கொண்டதுடன், எங்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணத்தையும் கறந்து விட்டு, கடைசியில் எங்களை ஏமாற்றி மோசடி செய்து விட்டார்” என்று, தனித்தனியாக அவர்கள் புகார் அளித்து உள்ளனர்.

அத்துடன், “இது போன்று அவர் மேலும் பல பெண்களிடம் பழகி ஏமாற்றி உள்ளார்” என்றும், அவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனையடுத்து, போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயனுக்கு உத்தரவிட்டார். 

இந்த உத்தரவின் பேரில் சென்னை வேப்பேரி உதவி கமிஷனர் ஹரிகுமார், வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கிய நிலையில், 26 வயதான முகமது சைய்யது என்ற காதல் மன்னன் அதிரடியாக கைது செய்தனர்.

அந்த காதல் மன்மதன் மீது  5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை அதிரடியாக கைது செய்து, தீவிரமாக  விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், “நான் கல்லூரி படித்து முடித்ததும், நல்ல உடல் வாகு இருந்ததால், நான் மாடலிங் தொழிலுக்கு சென்று, அங்கு நிறைய பெண்களிடம் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனால்,என் அழகை கண்டு மயங்கி நிறைய பெண்கள் என் காம வலையில் விழுந்திருக்கிறார்கள். நான் அவர்களுடன் என் படுக்கையை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இதற்கு சம்மதிக்காத பல பெண்களையும் திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி என் படுக்கைக்கு அழைத்து அவர்களையும் அனுபவித்து இருக்கிறேன்.

அதே போல், பல அழகிய பெண்கள் எனக்கு இன்பதும், லட்சக்கணக்கில் பணமும் கொடுத்திருக்கிறார்கள். அதனால் இதையே ஒரு தொழிலாக செய்ய நான் முற்பட்டேன். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொழிலில் எனக்கு நிறைய பணத்தையும், இன்பத்தையும் இளம் அழகிகள் அள்ளிக் கொடுத்தார்கள்” என்றும், அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இப்படியாக, அவரது செல்போனை வாங்கி ஆய்வு செய்ததில், இவனிடம் கிட்டதட்ட 20 க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் சிக்கி சீரழிந்தது தெரிய வந்தது. அவர்கள் தொடர்பான பட்டியலையும் போலீசார் தற்போது தயாரித்து வருகின்றனர்.

இதனையடுத்து, போலீசார் அந்த காதல் மன்மதனை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம், சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.