சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கு அதிமுக பொதுக்குழுவில் அவர் நிறைவேற்றிய தீர்மானம் செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு  சசிகலா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.  இதையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு  சென்ற நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூடி அவரை, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது. இதற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சசிகலா அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பதவிகள் கட்சியின் விதிகளுக்குப் புறம்பானது என்று உத்தரவிடக்கோரி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

அதனைத்தொடர்ந்து சசிகலாவின் மனுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. சசிகலா கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு அதை உச்சநீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும், தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்ட நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் என்று  தன்னை குறிப்பிட்டுச் சொல்வது தவறான தகவல் என்று நீதிமன்றத்தில் வாதத்தின் போது  தெரிவிக்கப்பட்டது. சென்னை மாவட்ட நான்காவது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி இந்த நிராகரிப்பு மனுக்களின் மீதான விசாரணையை நடத்திய நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்நிலையில்  இந்த அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை 4வது உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. 2016 அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா 2017-ம் ஆண்டு பொதுக் குழுவில் நீக்கி  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்திருந்தார். அதேபோல் சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய மனுவை உரிமையியல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தள்ளுபடி செய்துள்ளது. இதனை சசிகலா மேல்முறையீடு செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.