“பீஸ்ட்” திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, நடு கடலில் விஜய் ரசிகர்கள் பேனர் வைத்து உள்ள சம்பவம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு தற்போது “பீஸ்ட்” Mode -ல்  இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

குறிப்பாக, “பீஸ்ட்” திரைப்படம் வரும் 13 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் எல்லாம் உணர்ச்சிகளால் உந்தப்பட்டு உள்ளனர். 

இவை போதாது என்று, நேற்றைய தினம் நடிகர் விஜய், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, ஒளிப்பரப்பானது, விஜய் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், பொது இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாக வைத்திருக்கும் பேனர்களை அகற்ற அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், புதுச்சேரி  விஜய் ரசிகர் மன்றம் சார்பில், அந்த பகுதியில் உள்ள கடற்கரை காந்தி சிலைக்கு பின்புறமமாக நடுக்கடலில் “பீஸ்ட்” திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, ரசிகர்கள் பேனர் வைத்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

அதாவது, புதுச்சேரி உருளையன் பேட்டை விஜய் மன்றம் சார்பில் தான், அங்குள்ள கடற்கரை காந்தி சிலைக்கு பின்புறமாக நடுக்கடலில் இந்த பேனர் வைக்கப்பட்டு உள்ளது. 

புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு பின் புறம் சுமார் 200 மீட்டர் தூரத்தில் பிரெஞ்சு ஆட்சியர்களால் கப்பல் துறைமுக போக்குவரத்திற்காக அமைக்கப்பட்ட பாலம் ஒன்று, நாளடைவில் இடிந்து அதன் தூண்கள் மட்டும் அந்த கடலின் நடுவே தெரியும் படி இன்று வரை அப்படியே இருக்கின்றன.

இந்த கடற்கரை பகுதியில் சமீபகாலமாக அரசியல் கட்சியினர் மற்றும் பிரபல நடிகர்களின் பிறந்த நாளின் போது, கடலில் தெரியும் இரும்பு தூண்களில் பலரும் பேனர்களை கட்டி வந்தனர். 

“இது சற்று ஆபத்தானது என்பதால், இந்த தூண்களில் பேனர்கள் கட்டக்கூடாது” என்று, போலீசார் அவ்வப்போது, கடுமையாக எச்சரித்தும் வருகின்றனர்.

என்றாலும், புதுச்சேரி கடல் சற்றே சீற்றத்துடன் காணப்படும் நிலையிலும், ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கும் அந்த கடலில் அச்சப்படாமலும், எதிர்பாரத விபரீதத்தை பொருட்படுத்தாமல் மிகவும் ஆர்வ மிகுதியால், புதுச்சேரி உருளையன் பேட்டை விஜய் மன்றத்தின் ரசிகர்கள் சிலர், பைபர் படகில் சென்று, “பீட்ஸ்” பட பேனர்களை கட்டி உள்ளனர்.

தற்போது, “பீஸ்ட்” திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, நடு கடலில் விஜய் ரசிகர்கள் பேனர் வைத்து உள்ள போட்டோஸ், தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.