தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் OTT தளங்களின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்றார்போல் படங்களைப் போலவே புதிய புதிய தமிழ் வெப் சீரிஸ்களும் வெளிவருகின்றன. அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஃபிங்கர்டு வெப்சீரிஸ் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

அக்ஷ்ராஹாசன், அஸ்வின், சுனைனா, காயத்ரி, மதுசூதனன், சஞ்சனா, ஜீவா ரவி, உமா பத்மநாபன் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த சிங்கர் கிப்ட் வெப்சீரிஸ் ஜீ5 தளத்தில் ரிலீஸானது. க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற பின் கட்டிப் வெப்சீரிஸின் இரண்டாம் சீசன் தற்போது தயாராகியுள்ளது.

இயக்குனர் சிவகர் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபிங்கர்டிப் சீசன் 2-ல் பிரசன்னா அபர்ணா பாலமுரளி, ரெஜினா கெஸன்ட்ரா, வினோத் கிஷன், கண்ணா ரவி, சரத் ரவி, ஆர்ய லட்சுமி, ஹரிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சஸ்பன்ஸ் க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸான ஃபிங்கர்டிப் சீசன் 2 விரைவில் ஜி5 தளத்தில் ரிலீஸாகவுள்ளது.

ஃபிங்கர்டிப் சீசன் 2 வெப் சீரிஸின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது ஃபிங்கர்டிப் சீசன் 2-வின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியானது. சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஃபிங்கர்டிப் சீசன் 2 ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.