இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028 திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஜெய் தொடர்ந்து தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். முன்னதாக பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக, பட்டாம்பூச்சி என வரிசையாக ஜெய் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன

அடுத்ததாக மீண்டும் இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து ஜெய் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த புதிய படத்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி DD (திவ்யதர்ஷினி) முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கலகலப்பு 2 படத்துக்குப் பிறகு சுந்தர்.C-ஜீவா-ஜெய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் இயக்குனர் கோபி நயினார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வரும் ஜெய் நடிப்பில் அடுத்து ரிலீஸாகும் திரைப்படம் குற்றம் குற்றமே.  இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குற்றம் குற்றமே திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் காலை 10.30am மணிக்கு ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

D கம்பனி தயாரிப்பில் AXESS ஃபிலிம் ஃபேக்டரி வழங்கும் குற்றம் குற்றமே திரைப்படத்தில்  இயக்குனர் இமயம் பாரதிராஜா, ஜெய் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க காளி வெங்கட் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் அஜிஷ் இசை அமைத்துள்ள குற்றம் குற்றமே படத்திற்கு மு.காசிவிசுவநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார். 

இந்நிலையில் குற்றம் குற்றமே திரைப்படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள குற்றம் குற்றமே திரைப்படத்தின் ட்ரைலரை கீழே உள்ள லிங்கை காணலாம்.