தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பும் கலக்கலான காமெடி என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுக்கும் இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் M.ராஜேஷ் . சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜேஷ் அடுத்தடுத்து பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என தொடர்ந்து ரசிகர்களுக்கு நகைச்சுவை ட்ரீட் கொடுத்தார்.

மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் வசனங்களையும் M.ராஜேஷ் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் அடுத்ததாக MY3 எனும் புதிய வெப்சீரிஸை M.ராஜேஷ் இயக்கியுள்ளார். இந்த வெப்சீரிஸில் ஹன்சிகா மோட்வானி & பிக் பாஸ் முகேன் ராவ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் சாந்தனு பாக்யராஜ், ஜனனி ஐயர், ஆஷ்னா சாவேரி, சுப்பு பஞ்சு, அணிஷ் குருவில்லா, லட்சுமிநாராயணன், KPY ராமர், Tiger தங்கதுரை, அபிஷேக் மற்றும் VJ பார்வதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவில் கணேசன்.S இசையமைத்துள்ள MY3 வெப்சீரிஸை ட்ரெண்ட் லௌட் டிஜிட்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது.

நேரடியாக Disney Plus Hotstar தளத்தில் விரைவில் ரிலீசாக இருக்கும்  MY3-A Robotic Love Story வெப்சீரிஸில் ஹன்சிகா வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரோபோவாக நடித்துள்ளார் என தெரிகிறது. இந்நிலையில் MY3-A Robotic Love Story வெப் சீரிஸின் டைட்டிலை அறிமுகம் செய்யும் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…