கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த பிரபல தமிழ் நடிகை!
By Anand S | Galatta | April 11, 2022 16:04 PM IST

தென்னிந்திய திரையுலகின் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக விளங்கும் நடிகை பிரணிதா கன்னடத்தில் பொர்கி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்த உதயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வரும் ப்ரணிதா தமிழில் நடிகர் கார்த்தியின் சகுனி, சூர்யாவின் மாஸ் மற்றும் எனக்கு வாய்த்த அடிமைகள் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
கடைசியாக பாலிவுட்டில் ப்ரணிதா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஹங்காமா 2 மற்றும் புஜ்- தி ப்ரைட் ஆஃப் இந்தியா ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. முன்னதாக முன்னணி தொழிலதிபர் நிதின் ராஜுவை கடந்த ஆண்டு(2021) மே மாதம் ப்ரணிதா திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை ப்ரணிதா அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கணவரின் 34வது பிறந்இருகளுக்கு மேலிருந்து தேவதைகள் எங்களுக்கு பரிசு அளித்துள்ளனர் என குறிப்பிட்டு கர்பமாக இருப்பதை உறுதி செய்யும் புகைப்படத்தையும் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.
For the husband’s 34th birthday I think we have a present from the angels above .. 🧿 pic.twitter.com/dbmATPDm3D
— Pranitha Subhash (@pranitasubhash) April 11, 2022
Pranitha plays a sweet girl-next-door in EVA
27/12/2016 07:23 PM
Actress Pranitha's narrow escape in accident
15/02/2016 05:16 PM
26/11/2014 03:02 PM
Pranitha to replace Ramya in Pizza remake
19/12/2012 07:30 PM