17 வயது சிறுமியை, 18 வயது இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு, மாத்திரை வாங்கிக்கொடுத்து அதனைக் கலைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாகப் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி உள்ளார். 

இதனையடுத்து, குடும்ப சுமையைப் பாதியாகக் குறைக்க நினைத்த அந்த மாணவி, அதே பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

அப்போது, அதே கடையில் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞன் ஒருவனும் வேலைப் பார்த்து வந்தான். பேக்கரியில் வேலைக்குச் சேர்ந்த அந்த மாணவி, தொடக்கத்தில் அந்த 18 வயது இளைஞனுடன் நட்பாகப் பேசி பழகி வந்திருக்கிறார்.

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த 17 வயது சிறுமிக்கும், அந்த 18 வயது இளைஞனுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அப்போது, அந்த 18 வயது இளைஞன், “திருமணம் செய்து கொள்வதாக” ஆசை வார்த்தைகளை அந்த 17 வயது சிறுமியிடம் கூறி, அந்த சிறுமியிடம் நெருங்கிப் பழகி, அவரை அடிக்கடி தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படியான, நெருக்கமான உல்லாச வாழ்க்கை அவர்களுக்குள் அடிக்கடி நடந்து உள்ளது. இதன் காரணமாக, அந்த 17 வயது சிறுமி கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், சற்று அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, இதனை தன்னுடைய 18 வயது காதலனிடம் கூறி இருக்கிறார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞன், கர்ப்பத்தைக் கலைக்க அங்குள்ள ஒரு கடையில் மாத்திரை வாங்கிக் கொடுத்து, அந்த கர்ப்பத்தைக் கலைத்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில், கடந்த மாதம் 28 ஆம் தேதி கர்ப்பத்தைக் கலைக்கக் குறிப்பிட்ட சில மாத்திரைகளைச் சாப்பிட்ட அந்த சிறுமிக்கு, திடீரென்று மயக்கம் ஏற்பட்டு, மயங்கி விழுந்து உள்ளார். 

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக சிறுமியை மீட்டு அவசர அவசரமாக அருகில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், “சிறுமி கர்ப்பமாக இருந்ததாகவும், ஆனால் அந்த கர்ப்பம் தற்போது கலைந்து போனதால், அவளது உடல் நிலை பாதிக்கப்பட்டு இந்த மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும்” கூறி உள்ளனர்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியிடம் விசாரித்து உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, இந்தச் சம்பவம் குறித்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு, மருத்துவனைத் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இரந்த சிறுமியிடமும், அவரது பெற்றோரிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அத்துடன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு, பின்னர் அதனைக் கலைக்க மாத்திரை வாங்கிக் கொடுத்த இளைஞன் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.